மருத்துவ இடம் கைவிட்டால் 10 லட்சம் ரூபாய் அபராதம்
Added : ஜூன் 16, 2018 01:28
சென்னை: 'தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை பெற்று, அதை கைவிட்டால், 10 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்' என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், ஜூலை, 1ல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தனியார் நிர்வாக ஒதுக்கீடு இடங்களை பெற்று, அதை கைவிட்டால், 10 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, மருத்துவ கல்வி இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பு: எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., தகவல் குறிப்பேட்டில், இதற்கான விதி இணைக்கப்பட்டுள்ளது. இதன்படி, தனியார் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லுாரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை பெறும் மாணவர்கள், ஆக., 2 முதல், 19ம் தேதிக்குள் இடங்களை கைவிட்டால், ஒப்பந்தத்தை மீறியதற்காக, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். ஆகஸ்ட், 19க்குப்பின், இடங்களை கைவிட்டால், 10 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment