Saturday, June 16, 2018

சிறுமிக்கு சூடு வைத்து சித்ரவதை செய்த தம்பதி

Added : ஜூன் 16, 2018 01:09


தஞ்சாவூர்: கும்பகோணத்தில், தம்பதியரால் சித்தரவதை செய்யப்பட்ட, 10 வயது சிறுமி, உடல் முழுவதும் தழும்புகளின் வலியால் தவித்து வருகிறார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்ப கோணத்தை சேர்ந்த, முகமது அலி, ஆயிஷா தம்பதியருக்கு, இரண்டு பெண் குழந்தைகள்.சில ஆண்டுக்கு முன், முகமது அலி இறந்துவிட்டதால், இரண்டு ஆண்டுக்கு முன், ஆயிஷா, 10 வயது மகளை, அதே பகுதியைச் சேர்ந்த, மெகராஜ்பானு, நசீர் தம்பதியரிடமும், இளைய மகளை வேறு ஒருவரிடமும் விட்டு விட்டு, ஊரை விட்டு சென்று விட்டார். மெகராஜ் பானு, நசீர் இருவரும், 10 வயதுசிறுமியை அடித்தும், காயப்படுத்தியும் பல விதங்களில் கொடுமைப்படுத்தியுள்ளனர். கடந்த மாதம், 25ம் தேதி, சிறுமியின் தலையில் அரிவாளால்கொத்தியதால், வலியால்அலறித் துடித்துள்ளார்.தம்பதியர் வெளியில் சென்ற பின், ரத்தம் கொட்டிய நிலையில், வீட்டை விட்டு வெளியே வந்த சாயிராவை பார்த்த அந்தப் பகுதி மக்கள், குழந்தைகள் நல அலுவலகத்துக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் திலகவதி, சிறுமியை மீட்டு, முதலுதவி சிகிச்சைச் செய்து, குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைத்துஉள்ளார்.இது குறித்து, திலகவதி கூறியதாவது: இரண்டு ஆண்டுகளாக, மெஹராஜ் பானு, நசீர் ஆகியோர், சிறுமிக்கு பல கொடுமைகளைச் செய்துள்ளனர். காயங்களால் ஏற்பட்ட வடுக்கள், உடல் முழுக்க அப்படியே உள்ளது. மிறட்சியிலிருந்து மீளாத சிறுமிக்கு, கவுன்சலிங் கொடுத்து, பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க உள்ளோம்.அவளுடைய தங்கையையும் கண்டுபிடித்து, மீட்க வேண்டும், எனக் கதறுகிறாள். அதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளோம். இது தொடர்பாக, கும்பகோணம் போலீசில் புகார் கொடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024