'நீட்' இன்றி ஈரான் மாணவர்கள் சேர்ப்பு: புரோக்கர்களை பிடிக்க உத்தரவு
Added : ஜூன் 16, 2018 01:02
சென்னை: தேசிய தகுதி நுழைவு தேர்வான, 'நீட்' எழுதாமல், தனியார் மருத்துவ கல்லுாரியில், ஈரான் மாணவர்கள் சேர்ந்த விவகாரத்தில், புரோக்கர்களை பிடிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆசான் நினைவு பல் மருத்துவ கல்லுாரி உள்ளது. இங்கு, நீட் தேர்வு எழுதாமல், ஈரான் நாட்டு மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து, கட்டணமும் பெறப்பட்டது.
இதையடுத்து, நீட் தேர்வு எழுதாமல் சேர்க்கப்பட்ட மாணவர்களை, கல்லுாரியை விட்டு நீக்கும்படி, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை உத்தரவிட்டது.மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட பணத்தை திருப்பி தராமல், கல்லுாரியை விட்டு நீக்கியதால், காஞ்சிபுரம் போலீசில், ஈரான் மாணவர் புகார் கொடுத்தார். இவரைப் போல பாதிக்கப்பட்ட, ஈரான் மாணவர்கள், ௧௪ பேரின் விசா முடிந்து விட்டதால், அவர்கள் ஈரான் சென்று விட்டனர். அவர்களது குடும்பத்தினர், ஐதராபாத்தில் உள்ள துாதரக அதிகாரியை அணுகினர்.இந்த வழக்கு, ஏப்ரலில், நீதிபதி பி.என்.பிரகாஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆசான் கல்லுாரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'ஒரு மாணவருக்கு, ௫.௫௦ லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டு விட்டது. மீதி உள்ளவர்களுக்கு, ௪௭.௯௦ லட்சம் ரூபாய் தரப்பட வேண்டும். அதற்கான, டி.டி.,யை, ஜூன், ௧௧க்குள் தருவோம்' என்றார்.மாணவர்களுக்கான விசா முடிந்து விட்டதால், அவர்கள் ஈரான் நாட்டுக்கு சென்று விட்டனர்.
எனவே, மாணவர்களுக்கான, டி.டி.,யை, ஈரான் நாட்டு துாதரக அதிகாரியிடம் வழங்கும்படி, கல்லுாரி நிர்வாகத்துக்கு, நீதிபதி, பி.என்.பிரகாஷ் உத்தரவிட்டார். இதையடுத்து, இந்த வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ௪௭.௯௦ லட்சம் ரூபாய்க்கான, டி.டி., ஈரான் துாதரக அதிகாரியிடம், கல்லுாரி தரப்பில் வழங்கப்பட்டது. போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு டைரியையும், நீதிபதி பரிசீலித்தார். இவ்வழக்கில் போலீஸ் விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி, மாணவர்கள் சேர்க்கையில் ஈடுபட்ட புரோக்கர்களை பிடிக்கவும், புலன் விசாரணையை தொடரவும், நீதிபதி பி.என்.பிரகாஷ் உத்தரவிட்டார்.

No comments:
Post a Comment