Friday, June 8, 2018

'என்றும், 16 ஆக துரைமுருகன்' பன்னீர் கிண்டலால் சிரிப்பலை

Added : ஜூன் 08, 2018 04:49





சென்னை:எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகனை, துணை முதல்வர் பன்னீர்செல்வம் கிண்டலடிக்க, சபையில் சிரிப்பலை எழுந்தது.
சட்டசபையில், நேற்று கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:

அ.தி.மு.க., ஆறுக்குட்டி: கோவை வடக்கு தாலுகாவை இரண்டாக பிரித்து, துடியலுாரை புதிய தாலுகாவாக்க, அரசு நடவடிக்கை எடுக்குமா?
அமைச்சர் உதயகுமார்: நிபந்தனைகள் பூர்த்தியாகாததால், புதிய தாலுகா அமைப்பதற்கான சாத்தியக்கூறு இல்லை.

ஆறுக்குட்டி: கோவை வடக்கு தாலுகா, அதிக மக்கள் தொகை உடைய பகுதி. எனவே, தாலுகாவை பிரிக்க வேண்டும்.

அமைச்சர் உதயகுமார்: கோவை புறநகர் பகுதி, வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. கோவை வடக்கு தாலுகா அலுவலகம், நகருக்குள் உள்ளது; மக்கள் வந்து செல்ல சிரமப்படுகின்றனர்.எனினும், நிபந்தனைகள் பூர்த்தியாகாததால், தாலுகாவை பிரிப்பது சிரமமாக உள்ளது. இதை, முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் சென்று பரிசீலிக்கப்படும்.

அ.தி.மு.க., - லோகநாதன்: கே.வி.குப்பத்தை தலைமையிடமாக கொண்டு, புதிய தாலுகா உருவாக்க வேண்டும்.

அமைச்சர் உதயகுமார்: நிபந்தனைகள் பூர்த்தியாகவில்லை; அம்மாவின் அரசு, இதுவரை, 72 வட்டங்களை உருவாக்கி சாதனை படைத்துள்ளது.

எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன்: அம்மாவின் அரசு சார்பில், கே.வி.குப்பம் தாலுகாவை, 73வது தாலுகாவாக அறிவியுங்கள்.

துணை முதல்வர் பன்னீர்செல்வம்: நடந்து கொண்டிருப்பது ஜெ., அரசு என, எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஒப்புக் கொண்டதற்கு நன்றி.

துரைமுருகன்: அமைச்சர் கூறியதையே கூறினேன்; புதிய வட்டத்தை உருவாக்கினால், பாராட்ட தயாராக உள்ளேன்.

துணை முதல்வர் பன்னீர்செல்வம்: உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி. இன்று புதுப்பொலிவுடன் வந்துள்ளீர்கள்; என்றும் 16 ஆக உள்ளீர்கள்; அதன் ரகசியம் என்ன?இவ்வாறு துணை முதல்வர் கூறியதும், சட்டசபையில் சிரிப்பலை எழுந்தது. துரைமுருகன், 'பிங்க்' நிற சட்டை அணிந்து சபைக்கு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024