Friday, June 8, 2018

ரஜினியின், 'காலா' படம்ஸ்டாலின் தரப்பினர், 'ஷாக்'

dinamalar 08.06.2018

காலா படம் பற்றி, தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ நாளிதழில், நையாண்டியும், கிண்டலும் செய்து விமர்சித்துள்ள நிலையில், அப்படத்திற்கு, ரசிகர்கள் மத்தியில், அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் தரப்பினர், அதிர்ச்சி அடைந்துள்ளனர்.



பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினி நடித்துள்ள, காலா திரைப்படம், நேற்று வெளியானது. தமிழகத்தில் மட்டும், 600க்கும் மேற்பட்ட தியேட்டர்களில், இப்படம் திரையிடப்பட்டுள்ளது. ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு பின், வெளிவரும் திரைப்படம் என்பதால், அரசியல் வட்டாரத்திலும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

காலா படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு குறித்து, திரையுலக பிரபலங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், தங்கள் கருத்துகளை, சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். பெரும்பாலானோர், படத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதில், 'சிங்கத்தின் பாதையை உருவாக்குவோம்' என, நடிகர் ஆர்யா கருத்து தெரிவித்துள்ளார். ஸ்டாலினும், 'காலா' படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு குறித்து, தனக்கு நெருக்கமானவர்களிடம், நேற்று காலையில் விசாரித்துள்ளார். அரசியல் கருத்துகள், 'பஞ்ச்' வசனங்கள், படத்தில் இடம் பெற்றிருப்பதை கேட்டு தெரிந்துள்ளார். ஆனால், படம் குறித்து, ஸ்டாலின், எந்த கருத்தையும் வெளியிடவில்லை.

துாத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், அரசுக்கு ஆதரவாக, ரஜினி கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு, காலா பட வியாபாரம் தான் காரணம் என, முரசொலி பத்திரிகையில், நையாண்டியும், கிண்டலும் செய்து, விமர்சனம் வெளியாகியிருந்தது. இந்த கோபம் காரணமாக, தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, ரஜினி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருந்ததை, முரசொலியில் பிரசுரிக்கவில்லை. தி.மு.க., மேடைகளில், ரஜினியை கடுமையாக விமர்சித்து பேசும்படி, பேச்சாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், காலா படத்தை, தி.மு.க.,வில் உள்ள ரஜினி ரசிகர்களும் பார்த்து ரசித்துள்ளனர். எனவே, காலா வெற்றி, ஸ்டாலின் தரப்பினருக்கு, அதிர்ச்சி அளித்துள்ளதாக, ரஜினி மக்கள் மன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சூழ்ச்சி முறியடிப்பு!

தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர், கராத்தே தியாகராஜன் வெளியிட்ட அறிக்கையில், 'ரஜினி, அரசியலுக்கு தகுதியற்றவர் என்பது போலவும், செல்வாக்கு இழந்தவர் என்றும், கொச்சையாக விமர்சித்து வந்த உளறுவாய்காரர்களின் வாய்களில், 'ஆசிட்' ஊற்றியிருக்கிறது, காலா திரைப்படம். ரஜினியை, மக்களிடமிருந்து தனிமைப்படுத்த நினைத்த, குள்ள நரிகளின் சூழ்ச்சி முறியடிக்கப்பட்டுள்ளது' என, கூறியுள்ளார்.

அமெரிக்கா பயணம் :

அமெரிக்காவில் உள்ள தமிழ் பல்கலைக்கழகம் சார்பில், ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடக்கிறது. அதில் பங்கேற்க, வரும், 24ம் தேதி, அவர் அமெரிக்கா செல்கிறார் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

Playing cricket witha cork ball not a criminal offence: HC

Playing cricket with a cork ball not a criminal offence: HC A scheme for compensating such eventualities could be framed, says judge. Mohame...