Friday, June 8, 2018

உதய் எக்ஸ்பிரஸ்' சேவை இன்று உதயம்

Added : ஜூன் 08, 2018 07:01


கோவை:கோவை மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேறும் வகையில், கோவையில் இருந்து பெங்களூருவுக்கு, 'உதய் எக்ஸ்பிரஸ்' என்ற பெயரில், 'டபுள் டெக்கர்' ரயில், இன்றிலிருந்து தனது பயணத்தைத் துவக்குகிறது.கொங்கு மண்டல மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பான கோவை - பெங்களூரு இடையேயான உதய் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை, மத்திய ரயில்வே இணை அமைச்சர் ராஜென் கோஹெய்ன், இன்று காலை, 10:00 மணிக்கு துவக்கி வைக்கிறார்.ஏ.சி., 'சேர் கார்' வசதி, நவீன கழிவறைகள், அசத்தலான கட்டமைப்பு என பல்வேறு சிறப்பம்சங்களுடன் கூடிய 'டபுள் டெக்கர்' பெட்டிகளை கொண்ட உதய் எக்ஸ்பிரஸ் ரயில், கோவையில் இருந்து தினமும் காலை, 5:45க்கு புறப்பட்டு மதியம், 12:40க்கு பெங்களூரு சென்றடைகிறது. அங்கிருந்து மதியம், 2:15க்கு புறப்பட்டு இரவு, 9:00க்கு கோவை வந்தடைகிறது.திருப்பூர், ஈரோடு, சேலம், குப்பம் மற்றும் கிருஷ்ணராஜபுரம் ஆகிய ஸ்டேஷன்களில் நின்று செல்லும் இந்த ரயிலில், தலா, 120 இருக்கைகள் கொண்ட ஐந்து பெட்டிகள், தலா, 104 இருக்கைகள் கொண்ட மூன்று பெட்டிகள் என, எட்டு பெட்டிகளில், 912 பேர் பயணிக்க முடியும்.

இந்த ரயிலில் கோவையில் இருந்து பெங்களூரு செல்ல, 610 ரூபாய் டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பஸ் போக்குவரத்தை காட்டிலும், இந்த ரயிலில் கட்டணம் குறைவு என்பதோடு, பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளலாம் என்பதால் பயணிகள் கூட்டத்துக்கு பஞ்சம் இருக்காது என்கின்றனர் ரயில்வே அதிகாரிகள்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024