Thursday, June 7, 2018

24 மணிநேரத்தில் 1003 விமானங்கள் ; உலகின் பிஸி ஏர்போர்ட் ஆனது மும்பை

Added : ஜூன் 06, 2018 22:03




மும்பை : 24 மணிநேரத்தில், ( ஜூன் 5ம் தேதி) 1003 விமானங்களின் போக்குவரத்துகளை கையாண்டு, உலகின் பிஸியான ஏர்போர்ட் என்ற பெருமையை மும்பை விமானநிலையம் பெற்றுள்ளது.

தொடர் சாதனை :

மும்பை விமானநிலையம், கடந்த பிப்ரவரி மாதத்தின் ஒருநாளில் 980 விமானங்களின் போக்குவரத்துகளை கையாண்டதே அதன் சாதனையாக இருந்தது. இந்நிலையில், மும்பை விமானநிலையம், தனது சாதனையையே தற்போது முறியடித்துள்ளது.

இரண்டாவது இடத்தில் லண்டன் :

நாளொன்றுக்கு 800 விமானங்களின் போக்குவரத்துகளை கையாண்டு, உலகின் பிஸியான விமானநிலையங்கள் பட்டியலில், லண்டனின் காட்விக் விமானநிலையம் இரண்டாம் இடம்பிடித்துள்ளது.

மும்பை விமானநிலையத்தில் இரண்டு ரன்வேக்கள் உள்ளன. முதல் ரன்வே( 09/27)யில் ஒரு மணிநேரத்திற்கு 48 விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகையும் இரண்டாவது ரன்வே(14/32)யில், 35 விமானங்களின் போக்குவரத்தும் நடைபெறுகின்றன.

2017-18 நிதியாண்டில், மும்பை விமானநிலையம் 48.49 மில்லியன் பயணிகளை கையாண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024