Thursday, June 7, 2018

எத்தனை எதிர்ப்பு வந்தாலும் 'நீட்' தேர்வு தொடரும்: பா.ஜ.,

Added : ஜூன் 07, 2018 00:23



 

சென்னை: ''எந்த மாநிலத்தில் எதிர்ப்பு இருந்தாலும், 'நீட்' தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும்,'' என, மத்திய அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
சென்னை விமான நிலையத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி:- நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதற்காக, மாணவி பிரதிபா மரணம் அடைந்தது, மிகுந்த மன வேதனை அளிக்கிறது. தமிழகத்தில், சுயநல அரசியலுக்காக, நீட் தேர்வை காரணம் காட்டி, பொய் பிரசாரத்தை, சில கட்சிகள் செய்து வருகின்றன. இரண்டாண்டுக்கு முன்னரே, நீட் தேர்வுக்கான பயிற்சியை அளித்திருக்க வேண்டும். தமிழை, பிழைப்பாய் வைத்து, அரசியல் செய்வதை நிறுத்தி, தமிழை தாயாக நினைக்க வேண்டும். தமிழகம் மட்டுமல்ல, குஜராத்திலும், நீட் தேர்வை வேண்டாம் என்கின்றனர். தமிழகத்தில் மட்டும், நீட் தேர்வை திணிப்பது போல சொல்வது தவறு.மாணவர்களின் நலன் கருதியே, நீட் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. எந்த துறையில் படித்தாலும், முன்னேற முடியும் என, மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.தமிழகத்தில், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு இருக்கிறது. அதேபோல், குஜராத் உட்பட, பல மாநிலங்களில் எதிர்ப்பு இருக்கிறது. எந்த மாநிலத்தில் எதிர்ப்பு இருந்தாலும், நீட் தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024