அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழாவில் 64 மாணவர்களுக்கு தங்கப்பதக்கம்; 1.94 லட்சம் பேர் பட்டம் பெற்றனர்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வழங்கினார்
Published : 20 Jun 2018 07:29 IST
சென்னை
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 38-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்களை வழங்குகிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். உடன் பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவன முன்னாள் இயக்குநர் விஞ்ஞானி பி.பலராம், உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர். - படம்: பி.ஜோதிராமலிங்கம்
அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளில் ஒரு லட்சத்து 94 ஆயிரம் மாணவர்கள் பட்டம் பெற்றனர். பல்கலைக்கழக அளவில் முதலிடத்தைப் பிடித்த 64 மாணவர்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தங்கப் பதக்கங்களை வழங்கினார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தா அரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான பன்வாரிலால் புரோஹித் தலைமை தாங்கினார். இணைவேந்தரும், உயர்கல்வித் துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன் முன்னிலை வகித்தார். இந்த பட்டமளிப்பு விழாவில் பிஇ, பிடெக், பி.ஆர்க், உள்ளிட்ட படிப்புகளில் ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 84 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. பல்கலைக்கழக அளவில் முதலிடத்தைப் பிடித்த 41 மாணவிகள் உட்பட 64 பேருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தங்கப் பதக்கம் வழங்கி கவுரவித்தார்.
பட்டமளிப்பு விழா உரையாற்றிய பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவன முன்னாள் இயக்குநர் விஞ்ஞானி பி.பலராம், “இன்றைய தினம் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள் மிகவும் மோசமாக உள்ளன. துணைவேந்தர் நியமனங் கள் சரியாக இல்லாததே இதற்கெல்லாம் காரணம். கல்விப்பணிகளை கல்வியாளர்கள்தான் கவனிக்க வேண்டும். கல்வி விஷயங்களில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது” என்றார்.
அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசும்போது, “மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் 2016-17 அறிக்கையின்படி, இந்தியாவில் உயர்கல்வி செல்வோரின் எண்ணிக்கை 25.2 சதவீதமாக உள்ள நிலையில் தமிழகத்தில் 46.9 சதவீதமாக இருக்கிறது. அதேபோல், உயர்கல்வி செல்லும் மாணவிகளின் எண்ணிக்கை தேசிய அளவில் 24.5 சதவீதம்தான். ஆனால், தமிழகத்திலோ 45.6 சதவீதம் ஆகும். உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை வளர்ந்த நாடுகளை காட்டிலும் தமிழகத்தில் அதிகமாக உள்ளது” என்று குறிப்பிட்டார்.
துணைவேந்தர் எம்.கே.சுரப்பா பேசும்போது, “சிறந்த பல்கலைக்கழகங்களின் தேசிய தரவரிசைப் பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம் 4-வது இடத்தில் உள்ளது. அதேபோல், பொறியியல் கல்லூரிகளின் பட்டியலில் 8-வது இடத்தில் இருக்கிறது. 2017-18-ம் கல்வி ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகம் சர்வதேச இதழ்களில் 1800-க்கும் மேற்பட்ட ஆய் வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. கண்டுபிடிப்புகளை உருவாக்கும் வகையிலும் புதிய தொழில் நிறுவனங்களை உருவாக்கும் வகையிலும் மத்திய அரசின் நிதியுதவியுடன் விரை வில் கண்டுபிடிப்பு ஆராய்ச்சி மையம் தொடங்கப்படும்” என்றார்.
விழாவில், உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் சுனில் பாலிவால், தொழில்நுட்பக் கல்வி ஆணையர் விவேகானந்தன், பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.கணேசன் மற்றும் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment