மருத்துவ படிப்புகளுக்கு ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.13 லட்சம் மட்டுமே கட்டணம் : நிகர்நிலை பல்கலை.,-களுக்கு உத்தரவு
தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள நிகர்நிலை பல்கலைகழங்களின் மருத்துவ
கல்லூரிகள், மருத்துவ படிப்புகளுக்கு கல்வி கட்டணமாக ரூ.13 லட்சம் மட்டுமே
வசூலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை
பிறப்பித்துள்ளது.
ஆண்டு ஒன்றுக்கு ரூ.13 லட்சம் மட்டுமே வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஜவஹர் சண்முகம் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது. ஜவஹர் சண்முகம் தொடர்ந்த வழக்கில் விதிகளை மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் தெரிவித்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் நிகர்நிலை பல்கலைகழங்களின் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க குழு ஒன்றை அமைக்கவும் உத்தரவிட்டுள்ளது. 4 மாதங்களில் கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆண்டுக்கு ரூ.13 லட்சம் வீதம் ஐந்தரை ஆண்டுகள் மருத்துவ படிப்பை முடிக்க 71.5 லட்சம் ரூபாய் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டுக்கு மேற்கண்ட கல்விக்கட்டணம் தவிர MBBS சீட் பெற நன்கொடை தனியே வசூலிக்கப்படுவது கவனிக்க வேண்டிய ஒன்று. கல்லூரியின் தரத்தை பொறுத்து ரூ.80 லட்சம் வரை கட்டாய நன்கொடை வசூல் வேட்டை நடைபெறுவது நிதர்சனம்.
No comments:
Post a Comment