Wednesday, June 13, 2018

சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க உதவும் உணவுகள்:

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் உணவுகள்: விவரம்

சர்க்கரை   நோய் பாதிப்பை உணவு முறை கொண்டும் கட்டுப்படுத்த முடியும். சரியான உணவு வகைகளை உட்கொண்டால், சர்க்கரை நோய் தீவிரத்தின் அளவை கட்டுப்படுத்தலாம். சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க, எதை சாப்பிடலாம், எதை  தவிர்ப்பது என்பதைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.

சர்க்கரை நோய் அதிகமாக இருந்தாலும் அல்லது பரம்பரை வியாதி என்றாலும் சரி, சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்  உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நோயின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.

சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க உதவும் உணவுகள்:

ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை, 100 மி.லி. தண்ணீரில் இரவில் தூங்கும் போது ஊற வைத்து விட்டு, மறு நாள் அந்த வெந்தயத்தை சாப்பிட்டால், உடலில் சர்க்கரை அளவானது கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

அதிக நார்ச்சத்துள்ள காய்கறிகளான பட்டாணி, பீன்ஸ், ப்ராக்கோலி மற்றும் கீரை வகைகளை உணவோடு சேர்க்க வேண்டும்.  இந்த வகையான காய்கறிகள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவும்.

நீரிழிவு நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த, உப்பு மற்றும் மிளகு கலந்த தக்காளி சாற்றை, தினமும்  காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்

தானியம், ஓட்ஸ், கொண்டை கடலை மாவு மற்றும் இதர நார்ச்சத்து அடங் கிய உணவுகளை அன்றாடம் சேர்த்துக்கொள்ள வேண்டும். பாஸ்தா அல்லது நூடுல்ஸ் சாப்பிட தோன்றினால், அதனு டன் காய்கறி அல்லது முளைத்த பயறுகளை சேர்த்துக்  கொள் ளவும்.

பருப்பு வகைகள் மற்றும் முளைத்த பயறுகளை உணவோடு சேர்த்து கொள்ள வேண்டும். ஒமேகா3 மற்றும் மோனோ  அன்சாச்சுரேட் கொழுப்பினி போன்ற நல்ல கொழுப்புகள் கலந்த உணவை உட்கொண்டால் உடலுக்கு நல்லது.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் குறைவான கார்போஹைட்ரேட், அதிகமான நார்ச்சத்து, தேவையான அளவு புரதம், வைட்டமின் மற்றும் கனிமங்கள் கலந்த உணவை உண்ண வேண்டும். இனிப்பு மற்றும் கொழுப்பு அதிகமுள்ள பண்டங்களை உண்ணக் கூடாது. போதிய இடைவேளையில் அதாவது 5 வேளை சிறிய அளவிளான உணவுகளை எடுத்து கொல்வது அவசியம்.

No comments:

Post a Comment

Girl who left home after a fight 7 years ago found

Girl who left home after a fight 7 years ago found  Abhay@timesofindia.com 11.01.2025 New Delhi : In 2018, a 17-year-old girl fought with he...