இ.எஸ்.ஐ., கல்லூரிகளில் 103 இடம் நிறுத்திவைப்பு
Added : ஜூன் 24, 2018 01:30
சென்னை: அகில இந்திய ஒதுக்கீட்டில், இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, 103 எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்களை நிரப்ப, தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால், சென்னை, கோவை, பெங்களூரு, கொல்லம், கோல்கட்டா, ஐதராபாத் உள்ளிட்ட, 10 இடங்களில் உள்ள, இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, 103 இடங்கள் நிரப்பப்படாது என, மத்திய சுகாதார சேவைகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, அந்த இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பு: நாட்டில் உள்ள, 10 இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரிகளில், அகில இந்திய ஒதுக்கீட்டில் உள்ள, 103 இடங்களை நிரப்ப, கேரள உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எனவே, அந்த இடங்கள் நிரப்பப்படவில்லை என, தெரிவிக்கப்படுகிறது. அதேநேரத்தில், மற்ற மருத்துவக் கல்லுாரிகளில் சேர, இடம் கிடைத்தவர்கள், ஜூலை, 3ம் தேதிக்குள் சேர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment