9 மாவட்டங்களில் இன்று, அனல் காற்று வீசும் :வானிலை மையம் கணிப்பு
Added : ஜூன் 14, 2019 02:57
சென்னை:சென்னை உட்பட, ஒன்பது மாவட்டங்களில், இன்று, அனல் காற்று வீசும் என, வானிலை மையம் கணித்துள்ளது.
கோடையின் உச்சம், வட மாவட்டங்களை வாட்டி எடுக்கிறது. வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களில், அனல் காற்றும் அதிகரித்துள்ளது. நேற்று, மாநிலம் முழுவதும், வெயிலின் அளவு அதிகரித்தது. நேற்று மாலை, 5:30 மணி நிலவரப்படி, மதுரை, திருத்தணி, கடலுாரில், மாநிலத்தின் அதிகபட்ச வெப்ப நிலையாக, 41 டிகிரி செல்ஷியஸ் பதிவானது.இன்று, வெயிலின் தாக்கமும், அனல் காற்றும் அதிகமாக இருக்கும் என, கணிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலுார், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலுார், பெரம்பலுார் மற்றும் அரியலுார் மாவட்டங்களில், அனல் காற்றின் தாக்கம் கூடுதலாக இருக்கும்.இதனால், காலை, 11:00 முதல், மாலை, 4:00 மணி வரை, வெளியே நடமாடுவதை, மக்கள் தவிர்க்க கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.சென்னையில் அதிகபட்சம், 41 டிகிரி செல்ஷியஸ் வரை வெயில் பதிவாகும். சில இடங்களில், லேசான மேக மூட்டம் காணப்படும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.***

No comments:
Post a Comment