Thursday, June 6, 2019

தேக்கடியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

Added : ஜூன் 05, 2019 22:07

கூடலுார் : தென்மேற்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் குளுமையான சீதோஷ்ண நிலை நிலவுவதால், தேக்கடிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. சுற்றுலா தலமான தேக்கடியில் அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவேயிருக்கும் ஏரியில் படகு சவாரி செய்து கொண்டே வனவிலங்குகளை பார்த்து ரசிப்பது இதன் தனிச்சிறப்பாகும். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கோடை விடுமுறை இருந்த போதிலும் கடுமையான வெப்பம் நிலவியதாலும், நீர்மட்டம் குறைந்து இருந்ததாலும் சுற்றுலா பயணிகள் வருகை மிகக் குறைவாகவே இருந்தது.

இந்நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் தற்போது தேக்கடி பகுதியில் குளுமையான சீதோஷ்ணநிலை நிலவி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.மேலும் நீர்மட்டம் குறைவாக இருப்பதால் ஏரியில் தண்ணீர் குடிக்க யானைகள், மான்கள், காட்டுமாடுகள் அதிகமாக கரைப்பகுதிக்கு வருவதால் அவற்றை பார்த்து பயணிகள் மகிழ்கின்றனர்.


No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024