Saturday, June 15, 2019

வரும் திங்களன்று நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தம் 


By DIN | Published on : 14th June 2019 06:53 PM

புது தில்லி: வரும் திங்களன்று நாடுமுழுவதும் அனைத்து மருத்துவர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.



இதுதொடர்பாக இந்திய மருத்துவர்கள் சங்கம் வெள்ளியன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கொல்கத்தாவில் அரசு மருத்துவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து வரும் 17-ம் தேதி நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் என அனைத்து மருத்துவர்களும் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.

அத்தியாவசிய சேவைப்பணியில் இல்லாத மருத்துவர்கள் அன்று நாள் முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள். அதேபோல் எங்களது எதிர்ப்பைத் தெரிவிக்க வரும் 15, 16-ம் தேதிகளில் கறுப்பு பட்டை அணிந்து பணியாற்றவும், தர்ணா, அமைதிப்பேரணி நடத்தவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

இந்த நாட்களில் போராட்டம் நடைபெறும் தேதிகளில் அவசர சிகிச்சைப்பிரிவு தொடர்ந்து இயங்கும்.

இந்தப் போராட்டங்கள் திங்கள்கிழமை வரை தொடரும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024