Tuesday, June 18, 2019

சென்னையின் நிலை இது தான்!

Updated : ஜூன் 18, 2019 06:57 | Added : ஜூன் 18, 2019 06:54 |

சென்னை: 'தண்ணீர் பஞ்சம் இல்லை; வேண்டுமென்றே மிகைப்படுத்துகின்றனர்' என, அமைச்சர், வேலுமணி கூறியுள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.



தவிப்பு:

* சென்னையில், குடிநீர் வாரியம், 83 கோடி லிட்டர் தண்ணீரை வினியோகம் செய்து வந்தது. நிலத்தடி நீர் இயல்பாக கிடைத்தவரை, இது போதுமானதாக இருந்தது. தற்போது, நிலத்தடி நீரும், அதலபாதாளத்திற்கு சென்று விட்டது. நீர்நிலைகளும் வறண்டதால், குடிநீர் வாரியம், வினியோகத்தை, 52 கோடி லிட்டராக குறைத்துள்ளது. வாரிய கணக்குப்படி, 32 சதவீதம் குறைந்துள்ளது. அத்துடன் நிலத்தடிநீரும் இல்லாத நிலையில், 50 சதவீதத்திற்கு மேல் தண்ணீர் பற்றாக்குறையால், மக்கள் தவித்து வருகின்றனர்




* சென்னையில் உள்ள ஓட்டல்களில், தண்ணீர் தட்டுப்பாடால், மதிய உணவை நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. 'தண்ணீர் தட்டுப்பாடால் மதிய உணவை நிறுத்தும் நிலை ஏற்படலாம்; அதற்காக மன்னிக்க வேண்டுகிறோம்' என, ஓட்டல் நிர்வாகங்கள் விளம்பர பலகை வைத்துள்ளன. பல இடங்களிலும், சிறு ஓட்டல்கள் தண்ணீரின்றி மூடப்பட்டுள்ளன.




* தண்ணீர் பிரச்னை காரணமாக, ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஒரு பகுதி ஊழியர்களை வீடுகளில் இருந்து பணியாற்ற அறிவுறுத்தி உள்ளது. அலுவலகம் வருவோர், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும் வகையில், ஒருமுறை பயன்படுத்தும் சாப்பாட்டு தட்டுகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.



இப்படி, தண்ணீரால், சென்னை மக்கள் தவித்து வருவதோடு, அன்றாட செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 'தண்ணீர் பஞ்சம் இல்லை; வேண்டுமென்றே மிகைப்படுத்துகின்றனர்' என, அமைச்சர், வேலுமணி கூறியுள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024