தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அது, தென் மேற்கு வங்கக் கடலில் இன்னமும் காற்றழுத்த தாழ்வு நிலையாகவே நீடிக்கிறது.
இதனால், தமிழகத்தின் அநேக இடங்களில் மழை பெய்யக் கூடும். கடலோர பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புண்டு. உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும்.
காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரமடைந்து புயலாக மாறுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கின்றன. எனவே, அடுத்த இரண்டு நாட்களுக்கு பிறகு மழை படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் தொடர் மழை
சென்னையில் வெள்ளிக்கிழமை முதல் மூன்றாவது நாளாக தொடர் மழை பெய்து வருகிறது. அடுத்த 2 நாட்களுக்கு மாலை அல்லது இரவு நேரத்தில் சென்னையில் கன மழை பெய்ய வாய்ப்புண்டு. பகல் நேரத்தில் நகரின் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment