Friday, November 28, 2014

இந்தியர்களுக்கு 48 மணி நேரத்தில் விசா

புதுடில்லி: இந்தியாவிலிருந்து பிரான்ஸ் நாட்டிற்கு செல்பவர்களுக்கு 48 மணிநேரத்தி்ல் விசா வழங்கப்படும் என பிரான்ஸ் நாட்டிற்கான தூதர் ரிச்சர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: இந்தியாவில் இருந்து பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுலா மற்றும் வர்த்தக பயன்பாட்டிற்காக செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 2013ம் ஆண்டை காட்டிலும் இந்தாண்டு விசா வழங்கிய எண்ணிக்கை 33 சதவீதமாக அதிகரித்து காணப்படுகிறது. எனவே இதனை கருத்தில் கொண்டு 48 மணி நேரத்தி்ல்விசா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் இந்தியா முழுவதும் எட்டு இடங்களில் விசா விண்ணப்பங்கள் பெறுவதற்கான மையம் திறக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

சென்னை: புதிய பாடத்திட்டம் தொடர்பாக ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கும் பணியில், சக ஆசிரியர் களே ஈடுபடுத்தப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. தமிழ...