Saturday, November 29, 2014

விசு..ஏன் டி.எம்.எஸ்ஸை போட்டு இப்படி சித்ரவதை பண்றே?நல்லாதானே பாடறார்"



ஒரு முறை எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த "சிரித்து வாழ வேண்டும்" படத்திற்காக
"மெல்லிசை மன்னர்" எம்.எஸ்.விஸ்வநாதன்,டி.எம்.சௌந்தர்ராஜனை வைத்து ஒரு பாடல்
பதிவு செய்து கொண்டிருந்தார்.அந்த ட்யூனை எவ்வளவோ முறை சொல்லிக் கொடுத்தும்
டி.எம்.எஸ்ஸால் எம்.எஸ்.வி. நினைக்கும் அளவுக்கு சரியாக பாட முடியவில்லை.

எவ்வளவோ பொறுமையுடன் சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருந்தார் "மெல்லிசை
மன்னர்".ஆனாலும் திருப்தி பெறாத நிலையே நீடித்தது.இறுதியில் டி.எம்.எஸ்.
"விஸ்வநாதா,இனி கோயில்ல போய் சுண்டலுக்கு பாடினாலும் பாடுவேனே ஒழிய உன் இசையில்
பாடமாட்டேன்" என்று கூறி வேகமாக
சென்றுவிட்டார்.

எம்.ஜி.ஆர் கூட ,"விசு..ஏன் டி.எம்.எஸ்ஸை போட்டு இப்படி சித்ரவதை
பண்றே?நல்லாதானே பாடறார்" என்றார்.இருந்தாலும் எம்.எஸ்.வியோ விடாமல்,"இல்லண்ணே
இன்னும் நான் நினைப்பது மாதிரிஅவர் இன்னும் பாடலை"
என்றார்.சுற்றியிருந்தவர்கள்"அவர்தான் கோவிச்சுகிட்டு போயிட்டாரே..எப்படி
கூட்டிட்டு வருவீங்க" என்றார்கள்."எப்படி கூட்டிட்டு வர்றேன்னு பாருங்க" என்று
சொல்லிச் சென்ற எம்.எஸ்.வி.நேராக டி.எம்.எஸ் வீட்டுக்குச் சென்று சாஷ்டாங்கமாக
அவர் காலில் விழுந்து,"உங்களைத் தவிர
இந்தப் பாடலை வேறு யாருமே அவ்வளவு சிறப்பாகப் பாடமுடியாது..அதனால் தயவு செய்து
வந்து பாடுங்கள்"
பின் என்ன?!யாராவது அன்புக்கு அடி பணியாமல் போவார்களா?!

டி.எம்.எஸ்ஸீம் வந்து எம்.எஸ்.வி. நினைத்தபடி பாடிக்கொடுத்தார்.அந்தக்
காலத்தில் மனித அகங்காரத்தை விட கலைக்குத்தான் முக்கியத்துவம் வழங்கப்பட்டது
என்பது இந்த ஒரு செயல் மூலமாகவே நாம் அறிகிறோம்.

பாடல்: ஒன்றே சொல்வான் ஒன்றே செய்வான்...மேரா நாம் அப்துல் ரகுமான்...


http://music.cooltoad.com/music/song.php?id=257582



--

கோகுல்குமரன்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024