பொங்கலுக்குள் பொங்கும்
கத்திப்பாராபேருந்து நிலையம்
பொதுவாக ஒரு பகுதியில் பஸ்க்காக மக்கள் கூட்டம் அலைமோதும் ஆனா அங்கே இருக்காது பேருந்து நிழற்குடை, ஆனால் ஆளே இல்லாத இடங்களில் நிழற்குடை அமைச்சிருப்பாங்க. இது தான் சென்னை மாநகராட்சியோட சிறந்த பணி. அதே போல் தான் இந்த கிண்டி கத்திப்பாரா பேருந்து நிறுத்தம். இது பரங்கிமலை கண்டோன்மென்ட் கீழ் உள்ளது.
இதன் வழியாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாநகரப்பேருந்துகளும், 1,100க்கும் மேற்பட்ட வெளியூர் பேருந்துகளும் சென்று வருகின்றது. தினமும் இந்த பேருந்து நிறுத்தத்தை ஏராளமான பயணிகள் பயன்படுத்துகின்றனர். ஆனால் இங்கு அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்பதுதான் மக்களின் கவலையாக இருந்தது. தற்போது பல்வெறு கோரிக்கைகளுக்கு பிறகு இங்கு ரூ 1.25கோடி செலவில் ஏசியுடன் கூடிய நவீன பேருந்து நிழற்குடை அமைக்கப்பட்டுது. இந்த நிழற்குடை ஜனவரியில் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்;
“நம்ம ஊர்ல ஏ.சி. பேருந்து நிழற்குடை வருவது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு. நீண்டகோரிக்கைக்கு பிறகு டெல்லி, பாம்பே போன்ற ஊர்களில் இருக்கமாறி வரப்போகுது. கால்கடுக்க நின்னு பஸ் ஏற வேண்டாம். பெண்கள், முதியவர்களுக்கு ரொம்ப யூஸ்புல்லா இருக்கும். ஆனாலும் இந்த பேருந்து நிறுத்தத்தை முறையாக பராமரிக்க வேண்டும். எப்ப திறப்பாங்கன்னு ஆவலாக இருக்கு“என்றனர்.
அதிகாரி ஒருவர் கூறுகையில்�;
என்னென்ன வசதிகள் இருக்கு!
?
360 சதுர அடி பரப்பில் 3 ஏசி காத்திருப்பு அறைகள்.
?
ஓரு அறையில் 32 இருக்கைகள், 42 பேர் நிற்கும் வசதி.
?
குளிர்ந்த குடிநீர், டி.வி, மியூசிக், ஆடியோ மியூசிக்
?
ஆண், பெண் தனிக்கழிப்பறை.
?
காத்திருப்பு அறையின் வெளியே ஏ.டி.எம் ஆகியவை அமைக்கப்பட உள்ளன.
கத்திப்பாரா பேருந்து நிறுத்தம் நிழற்குடை அமைக்கும் பணி விறு, விறுப்பாக நடக்கிறது. ரூ.1.25 கோடி செலவில் கழிப்பறை வசதியுடன் 3 ஏசி காத்திருப்பு அறைகள் கட்டப்படுகிறது. பரங்கிமலை, கண்டோன்மென்ட்டின் முறையான அனுமதி பெற்று தனியார் நிறுவனம் கட்டிடங்களை கட்டுகின்றனர்.
இதற்கு முன் தனியார் வங்கி உதவியுடன் கும்பகோணத்தில் 10க்கும் மேற்பட்ட ஏ.சி பேருந்து நிழற்குடை கட்டப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தப்படியாக கிண்டி, கத்திப்பாரா தான். ஜனவரியில் பேருந்து நிறுத்தம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றார்.
No comments:
Post a Comment