Sunday, November 30, 2014

வெளிநாட்டு ஊழியருக்கு வசதியான தங்குமிடம்


சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கும் எப்போதுமே அணுக்க தொடர்பு உண்டு. சிங்கப்பூர் 1965ல் சுதந்திரம் அடைந்ததும் குடி நுழைவுச் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டன. பிறகு தொழில்துறையில் நாடு வளர்ந்தபோது, ஊழியர்கள் அதிகம் தேவைப்பட்டதால் வெளிநாட்டினருக்குச் சிங்கப்பூர் கதவுகளை அகலத் திறந்துவிட்டது.

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களைப் பொறுத்த வரை வெளிநாட்டு ஊழியர்கள், வெளிநாட்டு வல்லுநர் கள் என்று இரண்டு வகை உண்டு. பாதி தேர்ச்சி பெற்ற, அறவே தேர்ச்சி இல்லாத வெளிநாட்டு ஊழியர் கள் ஒரு வகை. தயாரிப்புத் துறை, கட்டுமானம், சேவைத் துறை போன்றவற்றில் இவர்கள் பணியாற்று கிறார்கள்.

இந்தியா, சீனா, பங்ளாதேஷ், பாகிஸ்தான், மியன்மார், இலங்கை, பிலிப்பீன்ஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து இவர்கள் வருகிறார்கள். வெளிநாட்டு வல்லுநர் கள் என்பவர்கள் மெத்த படித்தவர்கள். திறமைசாலிகள், நிபுணத்துவர்கள். இவர்கள் சிங்கப்பூர் பொருளியலில் உயர்மட்ட பணிகளில் பணியாற்றுகிறார்கள்.

இந்த ஆண்டு ஜூன் நிலவரப்படி சிங்கப்பூரில் மொத்த வெளிநாட்டு ஊழியர்கள் 1,336,700 பேர். இவர் களில் ‘எம்ப்ளாய்மெண்ட் பாஸ்’ வைத்திருப்போர் 176,600. ‘எஸ் -பாஸ்’இல் வேலை பார்ப்போர் 164,700 பேர். ‘ஒர்க் பர்-மிட்’ ஊழியர்கள் மொத்தம் 980,800 பேர். இல்லப் பணிப் பெண்கள் 218,300. ‘ஒர்க் பர்மிட்’ அனுமதியுடன் கட்டுமானத்துறையில் 321,200 பேர் வேலை பார்க்கிறார்கள். இதர ‘ஒர்க் பாஸ்’ அனுமதி பெற்றவர்கள் 14,700.

உலகின் பல நாடுகளில் வெளிநாட்டு ஊழியர்களுக் குக் கிடைக்கும் வசதிகளை, ஊதியத்தை, இதர சலுகை களைப் பார்க்கையில் சிங்கப்பூருக்கு வேலைக்கு வரு வோர் எவ்வளவோ கொடுத்து வைத்தவர்கள் என்பது தான் உண்மை. ஆனாலும் இங்கும் வெளிநாட்டு ஊழி யர்கள், குறிப்பாக கட்டுமான, கப்பல்துறை ஊழியர்கள் தங்குமிடம் தொடர்பான புகார்கள் எழுந்ததுண்டு.

இத்தகைய ஊழியர்களை ஏமாற்றும் சில முதலாளி களும் தங்கள் உரிமைகளைப் புரிந்துகொள்ளாமல் இத் தகைய வெளிநாட்டு ஊழியர்கள் இருட்டிலேயே இருந்து வருவதும் இதற்கான காரணங்களாகத் தெரியவந்து உள்ளன. ஏமாற்று முதலாளிகளைத் தண்டித்து அவர்களைத் தவிர்ப்பது, ஊழியர்களுக்கு முறையான தங்கு மிட, பொழுதுபோக்கு வசதிகள் கிடைப்பது ஆகிய அவசியத்தை உணர்ந்து அரசாங்கம் இப்போது முயற்சிகளை முடுக்கி விட்டுள்ளது.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...