Thursday, March 1, 2018

சி.பி.எஸ்.இ., விதிகளுக்கு டில்லி ஐகோர்ட் தடை

Added : மார் 01, 2018 01:19

புதுடில்லி: 'நீட்' எனப்படும், தேசிய அளவிலான மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதுவதற்கான தகுதி, விதிகள் குறித்து, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம் வெளியிட்ட அறிவிக்கைக்கு, டில்லி உயர் நீதிமன்றம், இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.'நீட்' தேர்வு எழுத, அதிபட்ச வயது வரம்பு, பொது பிரிவினருக்கு, 25; எஸ்.சி., - எஸ்.டி., உள்ளிட்ட பிரிவினருக்கு, 30 என, சி.பி.எஸ்.இ., சமீபத்தில் அறிவிக்கை வெளியிட்டது. மேலும், திறந்தநிலை பள்ளியில் படித்தோர், உயிரியலை கூடுதல் பாடமாக படித்தோர், பிளஸ் ௧ மற்றும் பிளஸ் 2 தேர்வை முடிக்க, இரு ஆண்டுகளுக்கு மேல் அவகாசம் எடுத்தோர், பள்ளியில் சேராமல் தனியாக படித்தோர், 'நீட்' தேர்வு எழுத தகுதி அற்றவர் என, அறிவிக்கப்பட்டது.வரும் கல்வியாண்டில், மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, 9ம் தேதி கடைசி நாள்.இந்நிலையில், சி.பி.எஸ்.இ., வகுத்த விதிகளால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், அதை எதிர்த்து, டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

மனுவை பரிசீலித்த நீதிபதிகள், சஞ்சீவ் கன்னா, சந்தர்சேகர் அடங்கிய அமர்வு, சி.பி.எஸ்.இ., வெளியிட்ட அறிவிக்கைக்கு, இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

No comments:

Post a Comment

Govt employees can now use LTC for Tejas, Vande Bharat and Humsafar trains

Govt employees can now use LTC for Tejas, Vande Bharat and Humsafar trains Under the LTC scheme, eligible Central government employees get t...