Thursday, March 1, 2018

ரூ.500 கொடுத்தால் உடனே ஆதார் புகைப்படம்

Added : மார் 01, 2018 01:42

குரோம்பேட்டை: பல்லாவரம் நகராட்சி அலுவலகத்தில், புரோக்கர்கள் மூலம் லஞ்சம் வாங்கி, ஆதார் புகைப்படம் எடுப்பதால், முறையாக விண்ணப்பிக்கும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். பல்லாவரம் நகராட்சி அலுவலகத்தினுள், ஆதார் புகைப்படம் எடுக்கப்படுகிறது. அங்கு, புதிதாக புகைப்படம் எடுப்பது, முகவரி மாற்றம், சிறுவர்கள் மற்றும் மாணவர்களுக்கு புகைப்படம் எடுத்தல் ஆகிய பணிகள் நடக்கின்றன.விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தால், அவர்களுக்கு ஒரு தேதி கொடுக்கப்படும். அந்த தேதியில் சென்று, புகைப்படம் எடுத்து கொள்ளலாம். தற்போது, குழந்தைகளுக்கு புகைப்படம் எடுக்க அதிகமானோர் வருகின்றனர்.நகராட்சி அலுவலகத்தில் சுற்றித்திரியும் புரோக்கர்கள், லஞ்சம் வாங்கிக்கொண்டு, உடனடியாக புகைப்படம் எடுக்க, ஏற்பாடு செய்து கொடுக்கின்றனர்.பெயர் உள்ளிட்ட மாற்றங்களுக்கு, 250 ரூபாய், புதியதாக புகைப்படம் எடுக்க, 400 முதல், 500 ரூபாய் வரை, லஞ்சம் வாங்கும் புரோக்கர்கள், கவுன்டர்களில் உள்ள ஊழியர்களுக்கு, ஒரு தொகையை கொடுத்து, உடனடியாக வேலையை முடிக்க ஏற்பாடு செய்கின்றனர்.நீண்ட துாரத்தில் இருந்து வருபவர்கள், வசதி படைத்தவர்கள், பணத்தை கொடுத்து, காரியத்தை சாதித்துக் கொள்கின்றனர். இதனால், முறையாக விண்ணப்பிக்கும் சாதாரண மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.காலையில் இருந்து மாலை வரை, அங்கேயே காத்திருக்க வேண்டியுள்ளது. புரோக்கர்களின் அட்டகாசத்தை பார்த்தும், கேள்வி கேட்க முடியாமல், பலர், பல மணி நேரம் காத்திருந்து, புகைப்படம் எடுக்கின்றனர்.புரோக்கர்களும், அவர்களுக்கு உடந்தையான ஊழியர்களும் இருக்கும் வரை, இதை கட்டுப்படுத்த முடியாது. எனவே, உயர் அதிகாரிகள் இவ்விஷயத்தில், கவனம் செலுத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Man held for ‘digital arrest’ scam

Man held for ‘digital arrest’ scam  Sindhu.Kannan@timesofindia.com 30.10.2024 Chennai : Two days after Prime Minister Narendra Modi cautione...