Sunday, May 20, 2018

 
4​1⁄2 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.80-ஐ நெருங்கியது பெட்ரோல் விலை : மாற்று எரிபொருளாக மெத்தனாலை உபயோகிக்க நிதிஆயோக் உறுப்பினர் வலியுறுத்தல்

 
தினகரன் 
 
சென்னை : சென்னையில் நான்கரை ஆண்டுகளுக்கு பிறகு பெட்ரோல் விலை ரூ.80 ஐ நெருங்கியுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் நிர்ணயித்து வருகின்றனர்.நேற்று சென்னையின் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 78. 08 காசுகளுக்கு விற்பனையானது. இன்று காலை 35 காசுகள் உயர்ந்து ரூ. 79. 13 காசுகளுக்கு விற்பனையாகிறது. இது போன்று டீசல் விலை லிட்டருக்கு 28 காசுகள் உயர்ந்து ரூ. 71.32 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 79.55 காசுகளுக்கு விற்கப்பட்டது.அதன்பின் நான்கரை ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பெட்ரோல் விலை ரூ.80ஐ நெருங்கியுள்ளது. இந்தியாவில் பெட்ரோல் டீசலுக்கு மாற்று எரிபொருளாக மெத்தனாலை உபயோகிக்க வேண்டிய காலம் நெருங்கி விட்டதாக நிதிஆயோக் உறுப்பினர் திரு.வி.கே.சரஸ்வத் தெரிவித்துள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக அதிகரித்து வருகிறது.அத்துடன் எரிபொருளின் பயன்பாடும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதே நிலை நீடித்தால் 2030ம் ஆண்டுக்குள் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகும். இதனைத் தவிர்க்க மாற்று எரிபொருளை பயன்படுத்த வேண்டிய சூழலில் உலக நாடுகள் உள்ளன. இது குறித்து டெல்லியில் பேசிய சரஸ்வத், சீனா போன்ற நாடுகள் சுற்றுசூழலுக்கு கேடு விளைவீக்காதா எரிப்பொருளான மெத்தனால் பயன்பாட்டிற்கு மாறி வருவதை சுட்டி காட்டினார். இந்தியாவும் விரைவில் மாற்று எரிபொருளுக்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 28.12.2024