Friday, May 18, 2018

'கூரியர்' பணியில், 'டப்பாவாலா'க்கள்?

Added : மே 17, 2018 22:14



மும்பை, மும்பையில், 'கூரியர்' பணிகளில், 'டப்பாவாலா'க்கள் ஈடுபட உள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.மஹாராஷ்டிராவில், முதல்வர், தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநில தலைநகர், மும்பையில், தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்களுக்கு, அவர்களின் வீடுகளில் இருந்து, மதிய உணவை வினியோகம் செய்யும் பணியில், டப்பாவாலாக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், கூரியர் மற்றும் பொருட்களை வினியோகம் செய்யும் பணிகளில் ஈடுபட, டப்பாவாலாக்கள் முடிவு செய்துள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.இது குறித்து, டப்பாவாலாக்கள் சங்கத்தைச் சேர்ந்த ஒருவர் கூறியதாவது:பொருட்களை வினியோகம் செய்வதன் மூலம், எங்களது வருமானம் அதிகரிக்கும். உணவு வினியோகம் போக, நேரம் கிடைக்கும் போது, இந்த பணியில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.இது குறித்து, எங்கள் உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து, 15 நாட்களில், அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளோம். கூரியர் மற்றும் பொருட்களை வினியோகம் செய்யும் பணியை, சோதனை முறையில் அமல்படுத்தி உள்ளோம். இது குறித்து உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இது தொடர்பாக, ஏற்கனவே, 'இ - காமர்ஸ்' நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Tamil Nadu Government Servants (Conditions of Service) Act, 2016 TAMILNADU India Tamil Nadu Government Servants (Conditions of Service) Act,...