Friday, May 18, 2018

விமானம் தாமதம்; ரூ.57 கோடி அபராதம்?

Added : மே 18, 2018 02:07 



  புதுடில்லி: விமானம் தாமதமாக சென்றதால், 'ஏர் - இந்தியா' விமான நிறுவனம், பயணியருக்கு, 57 கோடி ரூபாய் அபராதமாக செலுத்த வேண்டியிருக்கும் என, தகவல்கள் வெளியாகி உள்ளன.

பொதுத் துறையைச் சேர்ந்த, ஏர் - இந்தியா நிறுவனத்தின் விமானம், மே, 9ல், 323 பயணியருடன், தலைநகர் டில்லியிலிருந்து, அமெரிக்காவின், சிகாகோவுக்கு சென்றது. மோசமான வானிலை காரணமாக, விமானம் தாமதமாக சென்றது.

மேலும், அமெரிக்காவின் மில்வாக்கியில் தரையிறங்கியது. அங்கிருந்து சிகாகோவுக்கு செல்ல, 19 நிமிடங்கள் ஆகும். ஆனால், அங்கிருந்து தாமதமாக சென்றது. விமானத்தில், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் நீண்ட நேரம் காத்திருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், அமெரிக்க சட்டப்படி, சர்வதேச விமானங்களில், நான்கு மணி நேரத்திற்கும் மேல் பயணியர் காத்திருந்தால், அதற்கு, சம்பந்தப்பட்ட விமான நிறுவனம், பயணியருக்கு அபராதம் செலுத்த வேண்டும் என்பது விதி. இதன்படி, டில்லி - சிகாகோ விமானத்தில் பயணம் செய்த, 323 பயணியருக்கு, 57 கோடி ரூபாய், ஏர் - இந்தியா அபராதமாக செலுத்த வேண்டி இருக்கும்.

No comments:

Post a Comment

HC orders govt to appoint 292 auxiliary nurses

HC orders govt to appoint 292 auxiliary nurses  TIMES NEWS NETWORK  6.11.2024  Bhopal/Jabalpur : In a significant judgement, a division benc...