Friday, May 18, 2018

கோடைக்கால சுற்றுலா திட்டம்

Added : மே 17, 2018 22:42

சென்னை, தமிழக சுற்றுலாத்துறை சார்பில், கோடை கால, மூன்று நாள் சுற்றுலா திட்டத்தை அறிவிக்கப்பட்டு உள்ளது.கோடைக்காலத்தில், பொதுமக்கள் குடும்பத்துடன் பாதுகாப்பான சுற்றுலா மேற்கொள்ளும் வகையில், சுற்றுலாத்துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டுகள், கோடைகால சுற்றுலா திட்டத்தை அறிமுகப்படுத்தி வருகிறது.அவ்வகையில் தென்மாநிலங்களில் உள்ள, பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு, ஒவ்வொரு வெள்ளி இரவும் புறப்பட்டு, திங்கள் காலை, சென்னை திரும்பும் வகையில், மூன்று நாள் சுற்றுலா திட்டத்தை அறிவித்துள்ளது.அதன் படி, ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஒகனேக்கல், குற்றாலம், மைசூர், பெங்களூரு, மூனார் ஆகிய சுற்றுலா தலங்களுக்கு, பயணியர் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.சுற்றுலா பயணியர் வசதிக்காக, சாதாரண, குளிர்சாதன பேருந்துக்கள், தங்கும் அறைகள் உள்ளன. சுற்றுலா இடத்திற்கு ஏற்ப, 3,900 ரூபாய் முதல் 5,800 வரை வசூலிக்கப்படுகிறது. சிறார்களுக்கு கட்டணத்தில் சலுகை உள்ளது.மேலும் தகவல்களுக்கு, 044--2533 3333, 044--2533 3444 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Tamil Nadu Government Servants (Conditions of Service) Act, 2016 TAMILNADU India Tamil Nadu Government Servants (Conditions of Service) Act,...