Monday, May 21, 2018

மருத்துவ கவுன்சிலிங்கில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்

Added : மே 21, 2018 01:55





சென்னை : முதுநிலை மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் நடந்த, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, முதுநிலை மருத்துவப் படிப்பில், 981 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை, கவுன்சிலிங், சென்னை, ஓமந்துாரார் மருத்துவமனையில் நடக்கிறது. இதை, தமிழக மருத்துவ கல்வி இயக்கம் நடத்துகிறது. நேற்று முன்தினம் நடந்த, சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங்கில், 14 பேருக்கு இடம் கிடைத்தது. நேற்று நடந்த, பொதுப் பிரிவினருக்கான கவுன்சிலிங்கிற்கு, 1,000க்கும் மேற்பட்டோர் அழைக்கப்பட்டனர்.

இந்நிலையில், அங்கு வந்த டாக்டர்கள் சிலர், அகில இந்திய மருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்றோரையும், மாநில பொது கவுன்சிலிங்கில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரி, ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். அவர்களிடம், மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் பேச்சு நடத்தினர். பின், டாக்டர்கள் கலைந்து சென்றனர். இதையடுத்து, கவுன்சிலிங் தொடர்ந்து நடந்தது.

No comments:

Post a Comment

NEWS TODAY 28.12.2024