Monday, May 21, 2018

வைகாசி விசாக திருவிழா பழநியில் நாளை துவக்கம்

Added : மே 21, 2018 01:06


பழநி : பழநியில், வைகாசி விசாகத் திருவிழா, நாளை துவங்கி, பத்து நாட்கள் நடக்கிறது.

வசந்த உற்சவ விழா என அழைக்கப்படும், வைகாசி விசாகத் திருவிழா, பழநி, பெரியநாயகியம்மன் கோவிலில், நாளை காலையில், கொடியேற்றத்துடன் துவங்கி, மே31வரை நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக, ஆறாம் நாள், மே, 27 இரவு, முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.

ஏழாம் நாள், மே, 28ல் வைகாசி விசாகத்தன்று, மலைக்கோவில் சன்னதி, அதிகாலை 4:௦௦ மணிக்கு திறக்கப்படும். பெரியநாயகியம்மன் கோவில் நான்குரத வீதிகளில், மாலை, 4.30 மணிக்கு, தேரோட்டம் நடக்கிறது.

No comments:

Post a Comment

அரசு பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! 7.5% மருத்துவ இடஒதுக்கீட்டுக்கு இனி பள்ளிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை

அரசு பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! 7.5% மருத்துவ இடஒதுக்கீட்டுக்கு இனி பள்ளிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை Published On: 10 Jul 202...