Saturday, May 26, 2018

அதிகாரி காருக்கு கட்டணம் கேட்ட டோல்கேட் ஊழியருக்கு 'பளார்'

Added : மே 25, 2018 23:14 
 
பெரம்பலுார், பெரம்பலுார் அருகே, ஐ.ஏ.எஸ்., அதிகாரி காருக்கு சுங்கக்கட்டணம் கேட்ட செக்யூரிட்டியை, தாசில்தார் கன்னத்தில் அறைந்ததால், கட்டணம் வசூலிக்காமல் சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழக அரசு கேபிள் டிவி நிர்வாக இயக்குனர் குமரகுருபரன். இவர், திருச்சியிலிருந்து, சென்னைக்கு நேற்று முன்தினம் காரில் சென்றார். இரவு, 10:00 மணிக்கு, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலுார், திருமாந்துறையில் உள்ள சுங்கச்சாவடியை கடந்தபோது, இவரது காருக்கு சுங்கச்சாவடி ஊழியர் கட்டணம் கேட்டுள்ளார். இதற்கு, குமரகுருபரன், ஐ.ஏ.எஸ்., அதிகாரியான தனக்கு கட்டணம் கிடையாது என தெரிவித்துள்ளார். இதற்கு, சுங்கச்சாவடி ஊழியர் முதலில் மறுப்பு தெரிவித்து, பின், அலுவலகத்தில் கேட்டபின், அதிகாரியை கட்டணம் வசூலிக்காமல் அனுப்பி வைத்ததாக தெரிகிறது.இதுகுறித்து தகவலறிந்த, அரசு கேபிள் டிவி, பெரம்பலுார் தாசில்தார் பாலசுப்ரமணியன் மற்றும் வேப்பந்தட்டை தாசில்தார் சரவணன் ஆகிய இருவரும் சம்பவ இடத்துக்கு சென்று, சுங்கச்சாவடி ஊழியர்களிடம் விளக்கம் கேட்டுள்ளனனர்.அப்போது தாசில்தார் சரவணன், சுங்கச்சாவடி செக்யூரிட்டி காசிநாதனை கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அந்த சுங்கச் வடி வழியே சென்ற, அனைத்து வாகனங்களுக்கும் சுங்கக்கட்டணம் வசூலிக்காமல் அனுப்பி வைத்தனர். இரவு 10:30 மணியிலிருந்து, 1:30 மணி வரை இப்போராட்டம் நீடித்தது.

No comments:

Post a Comment

National anthem is sung at beginning, end of Governor’s address: Raj Bhavan

National anthem is sung at beginning, end of Governor’s address: Raj Bhavan The Governor reaffirms his commitment  to upholding the constit...