Saturday, May 26, 2018

ஆரம்பமே அமர்க்களம் வலுவான சாரலுடன் துவங்கிய தென்மேற்கு பருவமழை

Added : மே 25, 2018 22:41

தேவாரம்,தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை துவக்கத்தின் அறிகுறியாக நேற்று மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் பலத்த சாரல் பெய்தது.தேனி மாவட்டத்தில் கடந்த மாத இறுதியிலிருந்து கோடை மழை பரவலாக பெய்தது. போடி, குச்சனுார் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் கண்மாய்கள் நிறைந்தன. சில நாட்களாக கோடை மழையின் தாக்கம் குறைந்திருந்த நிலையில் , நேற்று காலை 11:00 மணிக்கு மேல், உத்தமபாளையம் தாலுகாவில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் சாரல் பெய்தது. உத்தமபாளையத்தில் பிற்பகலில் 13 மி.மீ., மழை பதிவானது.விவசாயிகள் கூறுகையில், ''மாவட்டத்தில் அதிக மழைப் பொழிவை தருவது தென்மேற்கு பருவமழை. கடந்த மூன்று ஆண்டுகளாக உரிய அளவு பெய்யாததால் வறட்சி தலை துாக்கியது. இந்தாண்டு வழக்கத்திற்கு முன்பே மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது. காற்று வீசாமல் வலுவான சாரல் பெய்ததால், இந்தாண்டு வழக்கத்தை விட கூடுதல் மழையிருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.'', என்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 7.11.2024