Sunday, May 20, 2018

'ஜாக்பாட்!,'கர்நாடகாவில்,37,இடம்,பிடித்த,குமாரசாமி முதல்வராகிறார்
புதுடில்லி:கர்நாடகாவில், மூன்றாவது முறையாக, முதல்வராக பதவியேற்ற, பா.ஜ.,வின் எடியூரப்பா, 75, பெரும்பான்மையை நிரூபிக்க, 112 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு கிடைக்காததால், மூன்றாம் நாளான நேற்று, அந்த பதவியில் இருந்து விலகினார். தேர்தலில், தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்தபோதும், பா.ஜ.,வுக்கு அதிர்ஷ்டம் இல்லாததால், வெறும், 37 இடங்களை பெற்ற, ம.ஜ.த.,வின், குமாரசாமி, காங்., ஆதரவுடன், முதல்வராக, ௨௩ம் தேதி பதவியேற்கிறார். 'இந்த கூட்டணி ஆட்சி நீடிக்குமா' என, அரசியல் நிபுணர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.




கர்நாடகாவில், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், ஓட்டுப்பதிவு நடந்த, 222 தொகுதிகளில், 104ல், பா.ஜ., வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ், 78 இடங்களிலும், குமாரசாமியின், மதச்சார்பற்ற ஜனதா தளம், 37 இடங்களிலும் வெற்றி பெற்றன. பிற கட்சிகள், மூன்று இடங்களை கைப்பற்றின.எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், புதிய அரசு அமைவதில் சிக்கல் நீடித்தது. தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில், ஆட்சி அமைக்க, பா.ஜ., உரிமை கோரியது.

தேர்தலுக்கு முன், தனித்தனியே போட்டியிட்ட, காங்., - ம.ஜ.த., கட்சிகள், தேர்தல் முடிவுகளுக்குப் பின், கூட்டணி அமைத்து, ம.ஜ.த., தலைவர், குமாரசாமி தலைமையில் ஆட்சி அமைக்க உரிமை கோரின.பா.ஜ.,வைச் சேர்ந்த, எடியூரப்பாவை ஆட்சி அமைக்கும் படி, கவர்னர் வஜுபாய் வாலா அழைப்பு விடுத்தார். இதனால், அதிர்ச்சி அடைந்த, காங்., - ம.ஜ.த., தலைவர்கள், எடியூரப்பா முதல்வராக பதவியேற்க தடை விதிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

மறுத்தது

அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், எடியூரப்பா முதல்வராக பதவியேற்க தடை விதிக்க மறுத்து விட்டது. இதையடுத்து, பெங்களூரில் உள்ள கவர்னர் மாளிகையில் நடந்த விழாவில், கர்நாடக முதல்வராக, எடியூரப்பா பதவியேற்றார்.இதைத் தொடர்ந்து, கர்நாடகாவில், பா.ஜ., ஆட்சி அமைவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு, நேற்று முன் தினம், உச்ச நீதிமன்றத்தில், நீதிபதி, ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வு முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது.


இருதரப்பு வாதங்களுக்கு பின், 'கர்நாடக சட்டசபையில், முதல்வர் எடியூரப்பா, 19ம் தேதி மாலை, 4 மணிக்கு, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.கர்நாடக சட்டசபையில், நேற்று காலை முதல், முதல்வர் எடியூரப்பா, பெரும்பான்மையை நிரூபிப்பது தொடர்பான அலுவல்கள் நடந்தன.


சொகுசு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்த, காங்., - ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள், பலத்த பாதுகாப்புடன், சட்டசபைக்கு அழைத்து வரப்பட்டனர்.இதற்கிடையே, தற்காலிக



சபாநாயகராக, பா.ஜ.,வின் போப்பையா நியமிக்கப்பட்டதை எதிர்த்த, காங்கிரசின் மனு, உச்ச நீதிமன்றத்தில், நேற்று காலை தள்ளுபடி செய்யப்பட்டது.இதையடுத்து, எடியூரப்பா, சித்தராமையா உள்ளிட்ட அனைத்து, எம்.எல்.ஏ.,க்களுக்கும், தற்காலிக சபாநாயகர் போப்பையா, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.




அக்னி போராட்டம்



சட்டசபையில், நம்பிக்கை ஓட்டெடுப்பு நடப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன், எடியூரப்பா உரையாற்றினார். அப்போது அவர் கூறிய தாவது:துவக்க காலத்தில், கர்நாடகாவில், பா.ஜ.,வுக்கு, இரண்டு, எம்.எல்.ஏ.,க்களே இருந்தனர். தற்போது, 104 உறுப்பினர் பலம் உள்ள கட்சியாக உருவெடுத்துள்ளது; இதற்காக கடுமையாக உழைத்தேன்.ஏழைகளின் வீடுகளுக்கு சென்று, அவர்களுடன் தங்கினேன். என் வாழ்க்கை முழுவதும், அக்னி போராட்டத்தை சந்தித்தேன். என் கடைசி மூச்சுள்ள வரை, ஏழைகளுக்காக உழைப்பேன்.


விவசாயிகளின் கஷ்டத்தை பார்த்துள்ளேன். நிலம் வழங்கி, அவர்களின் கண்ணீரை துடைத் தேன். முதல்வர் பதவியில் தொடர்ந்தால், விவசாயிகள் கடனை, தலா, 1 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி செய்ய விரும்பினேன். ஆனால், இன்று, நம்பிக்கை ஓட்டெடுப்பை எதிர்கொள்ளப் போவதில்லை. மாறாக, முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யப் போகிறேன். கவர்னர் மாளிகை சென்று, ராஜினாமாகடிதத்தை சமர்ப்பிப்பேன். இவ்வாறு அவர்கூறினார்.


பேச்சின் இடையே, ''கர்நாடக மாநில மக்களுக்காக கடைசி வரை உழைப்பேன்,'' என கூறியபோது, திரண்டு வந்த கண்ணீரை அடக்க முடியாமல், எடியூரப்பா தவித்தார்.சிறிது இடைவெளிக்கு பின், சிரமப்பட்டு, மீண்டும் பேசத் துவங்கிய அவர், ''அடுத்த சட்டசபைத் தேர்தலில்,156 இடங்களை, பா.ஜ., கைப்பற்றும்; அதற்காக கடுமையாக உழைப்பேன்,''என்றார்.


எடியூரப்பா, எட்டு முறை, எம்.எல்.ஏ.,வாகவும், இரண்டு முறை, எம்.பி.,யாகவும் பணியாற்றி உள்ளார். 2007ல், நவ., 12ல், எடியூரப்பா, முதல்வர் பதவியை ஏற்றபோது, ஏழு நாட்களில், அவருக்கு அளித்து வந்த ஆதரவை, ம.ஜ.த., விலக்கியதால், ஆட்சி கவிழ்ந்தது. இரண்டாம் முறையாக, 2008ல், கர்நாடகாவில், பா.ஜ., ஆட்சி அமைத்தபோது, முதல்வராக, எடியூரப்பா பதவியேற்றார்.மூன்று ஆண்டுகள் ஆட்சிக்கு பின், சுரங்க ஊழலில், லோக் ஆயுக்தா குற்றஞ்சாட்டியதை அடுத்து, பதவி விலகினார்.




23ம் தேதி



தற்போது, மூன்றாவது முறையாக முதல்வர் பதவியேற்ற எடியூரப்பா, மூன்றாம் நாளே, பதவி விலகியுள்ளார்.இதனால், 37 இடங்களை மட்டுமே பெற்ற, ம.ஜ.த., தலைவர், குமாரசாமி, 78 எம்.எல்.ஏ.,க்கள் பலம் உடைய, காங்., ஆதரவுடன், வரும், 23ம் தேதி, முதல்வராக பதவியேற்கிறார்.


ஏற்கனவே, 2006ல், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து, முதல்வர் பதவியை ஏற்றவர், குமாரசாமி. ஒப்பந்தப்படி, இரண்டு ஆண்டு ஆட்சிக்கு பின், பா.ஜ.,விடம், ஆட்சியை



Advertisement

ஒப்படைக்காமல், காலை வாரிவிட்டார்.'இந்த பின்னணி உடைய குமாரசாமியுடன், காங்., அமைத்துள்ள கூட்டணி, நீண்ட நாள் நீடிக்காது' என, அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.




நேரடி ஒளிபரப்புக்கு
சுப்ரீம் கோர்ட் உத்தரவு



பா.ஜ.,வைச் சேர்ந்த போப்பையா, தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஏ.கே.சிக்ரி, எஸ்.ஏ.பாப்டே, அசோக் பூஷன் அடங்கிய அமர்வு, நேற்று பிறப்பித்த உத்தரவு:


கர்நாடக மாநில சட்டசபையில், முதல்வர் மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு நிகழ்வுகள் அனைத்தும், நாடு முழுதும், நேரடி ஒளிபரப்பு செய்யப்பட வேண்டும். சபாநாயகர் குறித்த, காங்., உள்ளிட்ட கட்சிகளின் கவலையை, இந்த நடவடிக்கை போக்கும்.


சட்டசபை செயலர், சபை நடவடிக்கைகளை நேரடியாக பதிவு செய்வார். இந்த பதிவுகள், அனைத்து, 'டிவி' சேனல்களுக்கும், உடன் வழங்கப்பட வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டிருந்தது.இதைத் தொடர்ந்து, தற்காலிக சபாநாயகராக, போப்பையா நியமிக் கப்பட்டதை எதிர்த்து, காங்., தாக்கல் செய்த மனுவை, நீதிபதிகள்தள்ளுபடி செய்தனர்.



'ஆடியோ'வால் பரபரப்பு

கர்நாடக சட்டசபையில், எடியூரப்பா, உரையாற்றுவதற்கு சில மணி நேரம் முன், இரண்டு 'ஆடியோ'க்களை, காங்., வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தியது.அவற்றில் ஒன்றில், எடியூரப்பாவும், மற்றொன்றில், பா.ஜ., தலைவர்கள், ஸ்ரீராமுலு, முரளிதர ராவ் ஆகியோரும், காங்.,கைச் சேர்ந்த, எம்.எல்.ஏ.,க்களை, பா.ஜ.,வுக்கு இழுக்கும் நோக்கில், தொலைபேசியில் வலை விரித்ததாக, காங்கிரசார் குற்றஞ்சாட்டினர்.

மற்றொரு ஆடியோவில், 'கொச்சிக்கு செல்லாதீர்கள்; திரும்பி வாருங்கள்; உங்களை அமைச்சர் ஆக்குகிறோம்; நீங்கள் விரும்பிய எதையும் அளிக்க தயாராக உள்ளோம்' என, காங்., - எம்.எல்.ஏ.,வான, பி.சி.பாட்டீலிடம், எடியூரப்பா கூறுவதாக, காங்கிரசார் புகார் கூறியுள்ளனர்.

குமாரசாமிக்கு 15 நாள் அவகாசம்!

கவர்னர் வஜுபாய் வாலாவை சந்தித்த பின், ம.ஜ.த.,வின் குமாரசாமி, செய்தியாளர்களிடம் நேற்றிரவு கூறியதாவது:ஆட்சி அமைக்கும்படி, கவர்னர் எனக்கு அழைப்பு விடுத்துள்ளார். பெரும்பான்மை நிரூபிப்பதற்கு, 15 நாள் அவகாசம் கொடுத்துள்ளார்; அதற்கு முன்ன தாகவே பெரும்பான்மையை நிரூபிப்போம். ௨௩ம் தேதி, பெங்களூரு கண்டீரவா மைதானத்தில் பதவியேற்பு விழா நடக்கிறது.

ம.ஜ.த., - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி, ஐந்தாண்டு நீடிக்கும் வகையில், ஒருங் கிணைப்பு குழு அமைப்போம். பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு, பல்வேறு மாநில கட்சி தலைவர் கள் வருவதாக உறுதி அளித்து உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


பிரதமர் மீது ராகுல் பாய்ச்சல்

முதல்வர் பதவியில் இருந்து, எடியூரப்பா ராஜினாமா செய்ததை அடுத்து, காங்., தலைவர், ராகுல், டில்லியில், நிருபர்களிடம் கூறியதாவது:கர்நாடக மாநிலத்தில், எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்கும் செயலுக்கு, பிரதமர் நேரடியாக அங்கீகாரம் அளித்ததை எல்லாரும் பார்த்தீர்கள். ஊழலை ஒழிப்பதற்காக, பிரதமர் போராடுகிறார் என, கூறப்படுவது, முழு பொய் என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது.


கர்நாடகாவில், பா.ஜ.,வை தோற்கடிப்பதில், எதிர்க்கட்சிகள் அனைத்தும் உறுதியாக, ஓரணியில் நின்றன. இந்த ஒற்றுமை இனியும் தொடரும். இந்தியாவில், மக்களின் விருப்பமே முக்கியம்.

கர்நாடக சட்டசபையில், எல்லா நடைமுறை களும் முடிந்தபின், தேசிய கீதம் இசைக்கப் பட்டது. அதற்கு மரியாதை தராமல், பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களும், சபாநாயகரும், சபையை விட்டு வெளியேறியதை நீங்கள் பார்த்திருப்பீர் கள். ஜனநாயக அமைப்புகளை இழிவுபடுத்தும் செயலை, பா.ஜ., தொடர்ச்சி யாக செய்து வருகிறது. இதை எதிர்த்து தான், நாம் போராடி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 28.12.2024