Tuesday, May 1, 2018

கேட்டது சூப்... வந்தது ஃப்ரைடு ரைஸ் - சென்னை ஹோட்டலில் ரோபோவால் நடந்த கொலை 

எஸ்.மகேஷ்



சென்னை செம்மஞ்சேரி ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள ரோபோ உணவகத்தில் ஆர்டர் செய்த உணவு மாறியதால் ஊழியர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் கத்தியால் ஊழியர் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

முதல் முறையாகச் சென்னை உணவகத்தில் ரோபோ மூலம் வாடிக்கையாளர்களுக்கு உணவு சப்ளை செய்யப்பட்ட செய்தி பலருக்கு ஆச்சர்யம். ரோபோக்கள் சப்ளையர்களாக இருக்கும் ஹோட்டலுக்கு ஒருநாளாவது செல்ல வேண்டும் என்ற ஆசை சென்னையில் பலருக்கு இருந்துவருகிறது. இந்த ஹோட்டலில் நேற்றிரவு ரோபோவால் கொலை என்ற செய்தி பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சென்னை செம்மஞ்சேரி, ஓ.எம்.ஆர் சாலையில் ரோபோ உணவகம் செயல்பட்டுவருகிறது. இந்த உணவகத்தில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஈனோஸ்ராய் மேற்பார்வையாளராகவும் சப்ளையராகவும் பணியாற்றினார். அனில்குரன் சப்ளையராக உள்ளார். வாடிக்கையாளர் ஆர்டர் செய்யும் உணவு வகைகள் ரோபோ மூலம் சப்ளை செய்யப்படும். அந்த உணவுகளை ரோபோவிடம் ஈனோஸ்ராய், அனில்குரன் ஆகியோர் கொடுப்பார்கள்.







 இந்தநிலையில் நேற்றிரவு, வாடிக்கையாளர் ஒருவர் கொடுத்த ஆர்டருக்குப் பதிலாக வேறு உணவு அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், வாடிக்கையாளர், ஊழியர்களிடம் தகராறு செய்துவிட்டுச் சென்றுவிட்டார். அதன்பிறகு ஈனோஸ்ராய், அனில்குரன் ஆகியோருக்கு ஆர்டர் மாறியது தொடர்பாகத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அனில்குரன், ஈனோஸ்ராயைக் கத்தியால் குத்தினார். அதில் படுகாயமடைந்த ஈனோஸ்ராய் மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றனர். ஆனால், அவர் இறந்துவிட்டார். இதுகுறித்து செம்மஞ்சேரி போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் விசாரணை நடத்தி அனில்குரனைக் கைதுசெய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "இந்த ஹோட்டலில் ரோபோக்கள் சப்ளை செய்கின்றன. ஆனால், ரோபோக்கள் சப்ளை செய்யும் உணவுகளை ஊழியர்கள்தான் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க வேண்டும். சம்பவத்தன்று வாடிக்கையாளர் ஒருவர் சூப் ஆர்டர் செய்துள்ளார். ஆனால், ரோபோ கொண்டுச் சென்ற ஃப்ரைடு ரைஸை மாற்றி வாடிக்கையாளருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதான் பிரச்னைக்குக் காரணம். சூப்பை ஆர்டர் செய்த வாடிக்கையாளர் ஹோட்டலிலிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார். ஆனால், ஆர்டர் மாற்றி கொடுக்கப்பட்டதில் ஊழியர்கள் ஈனோஸ்ராய், அனில்குரன் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் எல்லோரிடமும் ஈனோஸ்ராய் அன்பாகப் பழகுவார். மேலும் அனில்குரன், அந்த ஹோட்டலில் சீனியர். ஈனோஸ்ராய் ஜூனியர். இவர்கள் இருவருக்கும் இடையே சீனியர், ஜூனியர் பிரச்னை இருந்ததும் எங்கள் விசாரணையில் தெரியவந்தது. இதுதான் கொலைக்கு முக்கிய காரணம்" என்றனர்.

No comments:

Post a Comment

PhonePe, GPay get 2 years more to cut UPI mkt share

PhonePe, GPay get 2 years more to cut UPI mkt share  NPCI Lifts 10Cr User Cap On WhatsApp Pay  Mayur.Shetty@timesofindia.com 01.01.2025 Mumb...