Monday, May 21, 2018

எடியூரப்பா பதவியேற்றது சரியான முடிவல்ல: ரஜினி 
 


dinamalar 21.05.2018




சென்னை:''கர்நாடகாவில், குமாரசாமி பதவியேற்பது, ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி. எடியூரப்பா பதவியேற்றது சரியான முடிவு அல்ல,'' என, நடிகர் ரஜினி கூறினார்.

மாவட்டச் செயலர்கள், இளைஞர் அணியை தொடர்ந்து, நடிகர் ரஜினி, நேற்று, தன் போயஸ் கார்டன் இல்லத்தில், மகளிர் அணியுடன் ஆலோசனை நடத்தினார்.பின், ரஜினி கூறியதாவது: ரஜினி மக்கள் மன்றத்திற்கு, பெண்களிடம் அமோக வரவேற்பு உள்ளது. பெண்கள் உள்ள இடத்தில் வெற்றி நிச்சயம்.

பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்தநாடுகள், முன்னேறி வருகின்றன. நான் துவங்கப் போகும் கட்சியிலும், பெண்களுக்கு முக்கியத்துவம் தரப்படும்.எனக்கு, 150 தொகுதியில் செல்வாக்கு இருப்பதாக வெளியான செய்தி, உண்மையாக இருந்தால் மகிழ்ச்சி அடைவேன்.

கட்சி துவங்கிய பின்னரே, கூட்டணி விஷயங்கள் குறித்து கூற முடியும். லோக்சபா தேர்தலுக்கு முன், கட்சியைதயார்படுத்த திட்டமிட்டு உள்ளோம்.

கர்நாடகாவில், குமாரசாமி பதவியேற்பது, ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி. எடியூரப்பா பதவியேற்றது, சரியான முடிவு அல்ல. இவ் விவகாரத்தை, சிறப்பாக கையாண்ட உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு தலை வணங்குகிறேன்.



கர்நாடகாவில் அமைய உள்ள அரசு, காவிரி விவகாரத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி செயல்பட வேண்டும். அணையின் கட்டுப்பாடு, கர்நாடகாவிடம் இருப்பது சரி அல்ல; ஆணையத்திடம் தான் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Student flooded with calls as his phone number appears in ‘Amaran’

Student flooded with calls as his phone number appears in ‘Amaran’ Wrong number: The callers wanted to have a word with  Sai Pallavi or comp...