Monday, May 21, 2018

'மொபைல் போன்' அடிமைகளாக மாறும் மாணவர்கள்: ஆய்வில், 'பகீர்' 
times of india 21.05.2018

புதுடில்லி:கல்லுாரி மாணவர்கள், ஒரு நாளைக்கு, 150 முறைக்கு மேல், மொபைல் போன்களை எடுத்துப் பார்க்கும் பழக்கத்துக்கு ஆளாகி இருப்பதாக, ஆய்வில் தெரியவந்து உள்ளது.




மொபைல் போன்கள் உபயோகிக்கும் பழக்கம், இன்றைய இளைஞர்கள் மத்தியில், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும், 'ஸ்மார்ட் போன்' எனப்படும், தொடு திரை மொபைல் போன்கள் மீது, இளைஞர்கள் தனி மோகம் வைத்துள்ளனர்.கல்லுாரி மாணவ -மாணவியர் மத்தியில், இந்த ஸ்மார்ட் போன் பயன்பாடு, கணிசமாக அதிகரித்து வருகிறது.

இதையடுத்து, மாணவர்களிடம், இந்த ஸ்மார்ட் போன்கள் ஏற்படுத்தி உள்ள தாக்கம் குறித்து, உ.பி.,யில் உள்ள, அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகம் மற்றும் இந்திய சமூக அறிவியல் கவுன்சில் இணைந்து ஆராய்ச்சி நடத்தின.

ஒரு பல்கலைக்கு, 200 மாணவர்கள் என்ற விகிதத்தில், 20 பல்கலை., யில் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது.

இதன் முடிவுகள் வருமாறு:

நம் நாட்டில், 80 சதவீதத்துக்கும் அதிகமான மாணவர்கள், மொபைல் போன் பயன்படுத்து கின்றனர். அதிலும், பெரும்பாலானோர், ஸ்மார்ட் போன்களையே பயன்படுத்துகின்றனர். தங்களுக்கு தேவையான , 'ஆப்ஸ்' எனப்படும் செயலிகளை பதிவிறக்கம் செய்து, கம்ப்யூட்டருக்கு மாற்றாக அதை பயன்படுத்துகின்றனர். மாணவர்களில், 26 சதவீதத்தினர் மட்டுமே, மொபைல் போனை, பேசுவதற்காக பயன்படுத்துகின்றனர்.

மற்றவர்கள், சமூக வலைதளங்கள் பார்க்க, கூகுள் தேடு தளங்கள் பயன்படுத்த, திரைப்படங்கள் பார்க்க, மொபைல் போன்களை பயன்படுத்துகின்றனர். வெறும்,14 சதவீத மாணவர்கள் மட்டுமே, மொபைல் போன்களை, ஒரு நாளைக்கு, மூன்று மணி நேரத்துக்கும் குறைவாக பயன்படுத்துகின்றனர்.

63 சதவீதம் பேர், நான்கில் இருந்து ஏழு மணி நேரம் வரை பயன்படுத்துகின்றனர். அதிலும், 23 சதவீத மாணவர்கள், தினமும்,

எட்டு மணி நேரத்துக்கும் மேலாக, தங்கள் மொபைல் போன்களை பயன்படுத்துகின்றனர்.

தங்கள் போனுக்கு வரும் எந்த தகவல்களையும் தவற விட்டுவிடகூடாது என்ற பதற்றம், மாணவர் கள் மத்தியில் அதிகம் காணப்படு கிறது. இதன் காரணமாக, அவர்கள், தினமும், 150 முறைக் கும் மேல், தங்கள் மொபைல் போன்களை எடுத்துப் பார்க்கும் பழக்கத்துக்கு ஆளாகி உள்ளனர்.

அவர்கள், முழுக்க முழுக்க மொபைல் போன் அடிமைகளாக மாறி வருகின்றனர்; இது அவர் களின் கல்வி உட்பட, அன்றாட வேலைகளை யும், கடுமையாக பாதிக்கிறது.இவ்வாறு, ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

Student flooded with calls as his phone number appears in ‘Amaran’

Student flooded with calls as his phone number appears in ‘Amaran’ Wrong number: The callers wanted to have a word with  Sai Pallavi or comp...