Saturday, May 5, 2018

WhatsApp - பில் சத்தமின்றி இணைக்கப்பட்டுள்ள ஒரு புதிய அம்சம்; அட்மின்கள் செம்ம குஷி.!  05.05.2018


பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான, உலகின் மிகப்பிரபலமான இன்ஸ்டன்ட் மெசேஜிங் தளமான வாட்ஸ்ஆப் - பாரபட்சம் இன்றி அதன் ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும்விண்டோஸ் பயனர்கள் என அனைவர்க்கும் - பொதுவான முறையில், எளிமையான அம்சங்களை வழங்குவதில் சுறுசுறுப்பாக பணியாற்றி வருகிறது.

  அதிலும், கடந்த ஒரு மாத காலமாக வாட்ஸ்ஆப்பில், பல புதிய அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன.


அதில் மிகவும் குறிப்பிட்டு கூறவேண்டிய அம்சங்கள் என்று பார்த்தால், ஸ்மார்ட்போனின் சேமிப்பகத்தில் இருந்து டெலிட் செய்த பின்பும் கூட, இரண்டாம் முறை மீடியா பைல்களை டவுன்லோட் செய்யக்கூடிய திறன்மற்றும் இரண்டிற்கும் மேற்ப்பட்ட அட்மின்களை கொண்டுள்ள வாட்ஸ்ஆப் க்ரூப்களுக்கான 'டிஸ்மிஸ் ஏஸ் அட்மின்'ஆகியவைகளை கூறலாம். அதற்கு அடுத்தபடியாக, வாட்ஸ்ஆப் அதன் 'சேவ்டு வாய்ஸ் மெசேஜஸ்' என்கிற அம்சத்தை உருட்டியது.

இதன் நன்மை என்ன.? இதை எதெற்கெல்லாம் பயன்படுத்தலாம்.? இந்த வரிசையில் தற்போது வாட்ஸ்ஆப், அதன் க்ரூப் அட்மின்களுக்கான சக்தியை (கட்டுப்பாட்டை) அதிகரிக்கும் ஒரு அம்சத்தை அதன் அனைத்து தளங்களிலும் உருட்டியுள்ளது. அதாவது, வாட்ஸ்ஆப், அதன் அனைத்து ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் பயனர்களுக்கு குறிப்பிட்டுள்ள அம்சத்தை இணைத்துள்ளது, அது என்ன அம்சம்.? இதன் நன்மை என்ன.? க்ரூப் அட்மின்கள் இதை எதெற்கெல்லாம் பயன்படுத்தலாம்.?

மெம்பர்களை கட்டுப்படுத்தும் அதிகாரங்கள்.!

"ரெஸ்ட்ரிக்ட் க்ரூப்" (Restrict Group) என்கிற பெயரை கொண்டுள்ள இந்த புதிய அம்சமானது, ஒரு வாட்ஸ்ஆப் க்ரூப்பின் அட்மினுக்கு, மெம்பர் ஒருவர் அனுப்பும் குறிப்பிட்ட டெக்ஸ்ட் மெசேஜை, புகைப்படங்களை, வீடியோக்களை,கிப் பைல்களை, டாகுமெண்ட்ஸ்களை அல்லது வாய்ஸ் மெசேஜைகட்டுப்படுத்தும் சக்தியை வழங்கும். எளிமையாக கூறவேண்டும் என்றால், ரெஸ்ட்ரிக்ட் க்ரூப் அம்சமானது க்ரூப்பின் மெம்பர்களை கட்டுப்படுத்தும் அதிகாரங்களை அட்மின்களுக்கு வழங்கும்.

வாட்ஸ்ஆப் 2.18.132 ஆண்ட்ராய்டு அப்ட்டேட்டில் அணுக கிடைக்கும்.!

புதிய வாட்ஸ்ஆப் அம்சங்களை பொது தளத்திற்கு உருட்டும் முன்னர், அதை பரிசோதிக்கும் தளமான வாட்ஸ்ஆப்பீட்டா இன்ஃபோவின் (WABetaInfo) கூற்றுப்படி, இந்த புதிய அம்சம் ஆனது, வாட்ஸ்ஆப் 2.18.132 ஆண்ட்ராய்டு அப்ட்டேட்டில் அணுக கிடைக்கும். இந்த ரெஸ்ட்ரிக்ட் க்ரூப் அம்சமானது, கடந்த 2017 டிசம்பரில் மாதத்தில் பரிசோதனை தளத்தின் ப்ரைவஸி செட்டிங்ஸ்-ல் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஒரு க்ரூப்பின் அனைத்து மெம்பர்களுக்கு,க்ரூப் டிஸ்க்ரிப்ஷன்,ஐகான் மற்றும் சப்ஜெக்டை திருத்தும் அனுமதி இருந்தது. ஆனால் இனி அதை அட்மினால் மட்டுமே நிகழ்த்த முடியும் (குறிப்பாக க்ரூப் டிஸ்க்ரிப்ஷன்) என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரே ஒரு முறை மட்டுமே டவுன்லோட்.!

முன்னதாக, வாட்ஸ்ஆப்பின் வழியாக நாம் டவுன்லோட் செய்யும் போட்டோக்கள், GIFகள் மற்றும் ஷார்ட் கிளிப்புகள் ஆனது, டவுன்லோட் செய்த நாளில் இருந்து அடுத்த 30 நாட்கள் வரை, வாட்ஸ்ஆப் சேவையகத்தில் சேமித்து வைக்கப்ப்பட்டு இருக்கும். ஒருமுறை டவுன்லோட் செய்து ஸ்மார்ட்போன் சேமிகப்பதில் டெலிட் செய்யாத பட்சத்தில் மட்டுமே, இந்த 30 நாட்கள் என்கிற கணக்கு செல்லுபடியாகும். ஒருவேளை டெலிட் செய்து விட்டால் மறுமுறை டவுன்லோட் செய்ய கிடைக்காது என்கிற நிலைப்பாடு இருந்தது.

ஒரு பயனரை தவிர, வேறு யாராலும் அணுக முடியாது.!

அதாவது, ஒரு முறை டவுன்லோட் செய்யப்பட்ட பைலை, ஸ்மார்ட்போன் சேமிகப்பதில் இருந்து டெலிட் செய்து விட்டால், அதை மீண்டும் வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியாது. ஆனால், அதை சாத்தியமாகும் வண்ணம் ஒரு மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. அதற்காக, வாட்ஸ்ஆப் சேமிப்பக நெறிமுறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஆக, இனிஒரு பயனரால் டவுன்லோட் செய்யப்பட்டு டெலிட் செய்யப்பட்டாலும் கூட, வாட்ஸ்ஆப்பின் சர்வரில் கிடைக்கப்பெற்ற அனைத்து செய்திகளும், மல்டிமீடியா உள்ளடக்கங்களும், மீண்டும் அணுகுவதற்காக சேமித்து வைக்கப்பட்டு இருக்கும். இந்த இடத்தில் வாட்ஸ்ஆப் சேவையகம் மறைகுறியாக்கப்பட்டது (என்க்ரிப்ட்ட்) என்பதை ஞாபகப்படுத்த விரும்புகிறோம். அதாவது இந்த பைல்களை ஒரு பயனரை தவிர, வேறு யாராலும் அணுக முடியாது.

எந்த வாட்ஸ்ஆப் வெர்ஷனில் கிடைக்கும்.?

 வாட்ஸ்ஆப் பீட்டா இன்ஃபோவின் அறிக்கையின் படி, இப்போது வரையிலாக ​​இந்த புதிய அம்சமானது, ஆண்ட்ராய்டு பதிப்பிற்கான வாட்ஸ்ஆப் பதிப்பில் (2.18.113) கிடைக்கிறது மற்றும் மிக விரைவில் ஐஓஎஸ் தளத்திற்கு,ம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை நிகழ்த்த தனிப்பட்ட பொத்தான் எதுவும் இணைக்கப்படவில்லை. ஸ்மார்ட்போனின் சேமிப்பகத்தில் இருந்தும் நீக்கப்பட்ட மீடியா உள்ளடக்கத்தை, குறிப்பிட்ட வாட்ஸ்ஆப் சாட் சென்று, மீண்டும் அந்த குறிப்பிட்ட மீடியா பைலை பதிவிறக்கம் செய்ய டாப் செய்யவும், அவ்வளவு தான்.

சேவ்டு வாய்ஸ் மெசேஜஸ் அம்சம் எப்படி வேலை செய்கிறது.?

இதற்கு முன்னதாக வெளியான 'சேவ்டு வாய்ஸ் மெசேஜஸ்' என்கிற அம்சத்தை பொறுத்தவரை, முன்னதாக, ஒரு பயனர் வாய்ஸ் மெசேஜை ரெக்கார்ட் அம்சத்தை பயன்படுத்தும் போது அவர் குறிப்பிட்ட சாட்டை விட்டு வெளியேற முடியாது. ஆனால் இனி ஒரு வாய்ஸ் மெசேஜை பதிவு செய்யும், அதே நேரத்தில் அழைப்புகள் அல்லது பேட்டரி தீர போகிறது அல்லது வேற ஆப்பிற்குள் நுழைய வேண்டும் என்றால், தாராளமாக வாட்ஸ்ஆப் சாட்டை விட்டு வெளியேறலாம்.

சரியாக உள்ளதா என்பதை பரிசோதிக்க விரும்பினால்.?

நீங்கள் பதிவு செய்த வரையிலான வாய்ஸ் மெசேஜ் ஆனது வாட்ஸ்ஆப்பில் சேமிக்கப்பட்டு இருக்கும். எனவே நீங்கள் மீண்டும் மற்றொரு முறை பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. இப்படி சேவ்டு வாய்ஸ் மெசேஜஸ் அம்சம் வேலை செய்யும். பாதியில் விட்டுச்சென்ற வாய்ஸ் மெசேஜ் ஆனது சரியாக உள்ளதா என்பதை பரிசோதிக்க விரும்பினால், அதற்கும் ஒரு வழி இருக்கிறது. வெறுமனே ஹோம் ஸ்க்ரீன் செல்வதின் வழியாக வாய்ஸ் மெசேஜை கேட்க முடியும் என்று வெளியான WaBetaInfo அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக்கொள்கைகளை மேம்படுத்தல்.!

வாட்ஸ்ஆப் பீட்டாவில், இந்த அம்சம் முன்னிருப்பாக ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு விட்டதால், வாட்ஸ்ஆப் பீட்டா பயனர்கள், உள்நுழையவும் இதை உடனடியாக பயன்படுத்தத் தொடங்கலாம். இதற்கிடையில், மே 25 அன்று ஐரோப்பாவில் பொது தரவு பாதுகாப்பு ஒழுங்குமுறையின் கீழ், வாட்ஸ்ஆப் அதன் சேவை விதிமுறைகளையும் தனியுரிமைக் கொள்கைகளையும் மேம்படுத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் உள்ள எல்லா பயனர்களுக்கும்.!

நடைமுறைக்கு வரும் புதிய கொள்கைகளோடு சேர்த்து, Request Account info என்கிற ஒரு அம்சமும் இடம் பெற உள்ளது. வாட்ஸ்ஆப் பயன்பாட்டின் அடுத்த பதிப்பானது, மே 25-ல் வெளியானால், இந்தஅம்சத்தினை அனைவராலும் பார்க்க முடியும். இந்த அம்சமானது வாட்ஸ்ஆப் மூலம் சேகரிக்கப்படும், பயனர் ஒருவரின் சிறிய அளவிலான டேட்டாவை டவுன்லோட் செய்ய உதவும். இந்த அம்சமானது, உலகம் முழுவதும் உள்ள எல்லாபயனர்களுக்கும் உருட்டப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு முறை ரெக்வஸ்ட் செய்த பின்னர்.!

"ரெக்வஸ்ட் அக்கவுண்ட் இன்ஃபோ" என்கிற இந்த புதிய அம்சமானது, வாட்ஸ்ஆப்பின் செட்டிங்ஸ்-ல் காணப்படும். அதை கிளிக் செய்து பின்னர் 'அக்கவுண்ட்' என்கிற விருப்பத்தை கிளிக் செய்ய "ரெக்வஸ்ட் அனுப்பட்டது" என்கிற நோட்டிபிகேஷன் கிடைக்கும். கோரிக்கை நிகழ்த்தப்பட்ட தேதியிலிருந்து அடுத்த மூன்று நாட்களுக்குள் வந்து சேரும். ஒரு முறை ரெக்வஸ்ட் செய்த பின்னர் நடுவில் ரத்து செய்ய முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அக்கவுண்ட்டை டெலிட் செய்ய வேண்டும்.!

ஒருவேளை கண்டிப்பாக அனுப்பிய ரெக்வஸ்ட்டை கேன்சல் செய்ய வேண்டும் என்றால், ஒன்று உங்களின் வாட்ஸ்ஆப் அக்கவுண்ட்டை டெலிட் செய்ய வேண்டும் அல்லது, வாட்ஸ்ஆப் நம்பரை மாற்ற வேண்டும். இந்த இரண்டில் ஒன்றை செய்வதின் விளைவாக, அனுப்பட்ட கோரிக்கையை ரத்து செய்யலாம். உங்கள் அக்கவுண்ட் சார்ந்த விவரங்கள் டவுன்லோட் செய்ய திறந்து விடப்பட்டுள்ளது என்கிற தகவலை வாட்ஸ்ஆப் உங்களுக்கு அனுப்பி வைக்கும். அந்த அறிவிப்பு கிடைத்த அடுத்த சில வாரங்களுக்குள் அதை நீங்கள் டவுன்லோட் செய்ய வேண்டும். இல்லையெனில் அது வாட்ஸ்ஆப் சேவையகங்ளில் இருந்து குறிப்பிட்ட தகவல்கள் நீக்கப்படும்.

சுவாரசியம் என்னவெனில்.!

மேற்குறிப்பிட்ட அதே வழிமுறைகளை பின்பற்ற இறுதியாக "டவுன்லோட் ரிப்போர்ட்" என்கிற ஒரு விருப்பம் உங்களுக்கு கிடைக்கும். அதை டாப் செய்து டவுன்லோட் செய்து கொள்ளவும். டவுன்லோட் செய்யப்பட்ட டேட்டா ஆனது ஸிப் பைல் வடிவத்தில் அணுக கிடைக்கும்என்பது குறிப்பிடத் தக்கது. சுவாரசியம் என்னவெனில், டவுன்லோட் செய்த ரிப்போர்ட்டை நிரந்தரமாக டெலிட்செய்யும் ஒரு அம்சத்தையும் வாட்ஸ்ஆப் வழங்குகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024