ஆசிரியர் பகவானின் பணியிட மாற்றம் நிறுத்திவைப்பு - அரசு பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி!
திருத்தணி அருகே ஆங்கில பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர் வேறு பள்ளிக்கு
செல்லாமல் தொடர்ந்து இங்கேய பணியாற்ற வேண்டும் என்று கூறி மாணவர்கள் அவரது
காலை பிடித்து கொண்டு கண்ணீர்விட்டு கதறியது அனைவரையும் உருக
வைத்துவிட்டது.
வெள்ளியகரம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் கூடுதல் ஆசிரியர் இருப்பதாக
கூறி ஆங்கில ஆசிரியர் பகவானை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்துள்ளனர்.
இதற்கான உத்தரவு நகலை வாங்கி கொண்டு செல்ல முயன்ற அவரிடம் வேறு பள்ளிக்கு
செல்ல வேண்டாம் என்று கூறி மாணவர்கள் காலை பிடித்துக் கொண்டு கதறி அழுதனர்.
நீங்கள் பாடம் நடத்தினால் அனைவரும் தேர்ச்சி பெறுவோம் என்று கூறி
மாணவர்கள் அனைவரும் கண்ணீர் விட்டு அழுதனர்.
மாணவர்கள் அழுவதை கண்ட ஆசிரியரும் கண்கலங்கி அழ ஆரம்பித்துவிட்டார்.
மாணவர்கள் கதறி அழுததால் பாதுகாப்பு பணிக்கு வந்த காவலர்களும்
செய்வதறியமால் திகைத்து நின்றனர். ஆசிரியர்கள் மாற்றப்படுவதை எதிர்த்து
பெற்றோர்கள் பள்ளிக்கு பூட்டு போட்டு நேற்று முன்தினம் போராட்டமும்
நடத்தினர். இந்நிலையில் மாணவர்களின் பாசப்போரட்டதால் பகவானின் பணியிட
மாற்றம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment