மின் கம்பத்தில் மோதிய ஆம்னி பஸ் : பீஹாரை சேர்ந்த 38 பேர் காயம்
Added : செப் 24, 2018 02:46
கடலுார்: ஹைமாஸ் விளக்கு மின் கம்பத்தில், ஆம்னி பஸ் மோதியதில், பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த, 38 பேர் காயம் அடைந்தனர். பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோர், 14ம் தேதி, ஆம்னி பஸ்களில், ஆன்மிக தலங்களுக்கு பயணம் துவக்கினர். நேற்று முன்தினம் ஆந்திரா மாநிலம், திருப்பதிக்கு சென்று தரிசனம் முடித்து, தமிழகத்தில் மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரிக்கு புறப்பட்டனர். இதில், ஒரு ஆம்னி பஸ்சில், 51 பேர் பயணம் செய்தனர். நேற்று அதிகாலை, 2:50 மணியளவில், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கடலுார் மாவட்டம், வேப்பூரில், சென்டர் மீடியனில் உள்ள, ஹைமாஸ் விளக்கு மின் கம்பத்தின் மீது, ஆம்னி பஸ் மோதியது. இவ்விபத்தில், பஸ்சில் பயணித்த, 38 பேர் காயமடைந்தனர். 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வேப்பூர் போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு, 32 பேரை, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கும், ஆறு பேரை பெரம்பலுார் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பினர். காயமடைந்தவர்கள், தங்கள் மாநிலத்திற்கு செல்ல உதவுமாறு கோரிக்கை விடுத்தனர். வேப்பூரில் இருந்து சென்னை, எழும்பூர் ரயில் நிலையம் செல்வதற்கு அரசு பஸ்சை, ஆர்.டி.ஓ., ஏற்பாடு செய்தார். நேற்று இரவு, 7:00 மணியளவில், 49 பேர் பீஹாருக்கு புறப்பட்டனர்.
காஸ், 'லீக்'கால் பரபரப்பு : தொடர்ச்சியாக பல நாட்கள் ஆன்மிக தலங்களுக்கு பயணம் செய்வதால், உணவு சமைப்பதற்காக அடுப்பு, காஸ் சிலிண்டர்களை, பயணம் செய்த பஸ்சிலேயே அவர்கள் எடுத்து வந்தனர்.விபத்து காரணமாக, அவர்கள் கொண்டு வந்த பொருட்கள், வேப்பூர், போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து வைக்கப்பட்டிருந்தன. அதில், ஒரு சிலிண்டரில் காஸ் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. வேப்பூர் தீயணைப்பு வீரர்கள் சிலிண்டரை சரி செய்து, காஸ் வெளியேறுவதை தடுத்தனர்.

No comments:
Post a Comment