Monday, September 24, 2018

பாலியல் தொந்தரவு சர்ச்சை துறை விசாரணை துவக்கம்

Added : செப் 24, 2018 00:22


திருப்பூர்: செவிலியர் பயிற்சிப் பள்ளி மாணவியருக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக எழுந்த புகாரில் துறை ரீதியான விசாரணை துவங்கியுள்ளது. திருப்பூர், தலைமை அரசு மருத்துவமனையில், 14 ஆண்டுகளாக செவிலியர் பயிற்சிப் பள்ளி செயல்படுகிறது; இங்கு, 300க்கும் மேற்பட்ட மாணவியர் நர்சிங் பயிற்சி பெறுகின்றனர். இவர்களுக்கு மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் செய்முறை பயிற்சியும் வழங்கப்படுகிறது. பயிற்சி பெறும் மாணவியருக்கு அங்கு பணியாற்றும் ஆண் செவிலியர்களில் சிலர் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக, பள்ளி முதல்வரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை நடத்த மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் மற்றும் அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளருக்கு பயிற்சி பள்ளி நிர்வாகம் கடிதம் அனுப்பியுள்ளது.தலைமை அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் சோமசுந்தரம் கூறியதாவது: நர்சிங் மாணவியர் பாலியல் தொந்தரவு தொடர்பான புகார் குறித்து, விசாரணை துவங்கியுள்ளது. தற்போது, நான் விடுப்பில் உள்ளேன்; விடுப்பு முடிந்து வந்ததும், தொடர் நடவடிக்கைஎடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024