கருவூலங்களில் பாதுகாப்புக்கு உத்தரவு
Added : ஜூன் 11, 2019 22:43
'அரசு ஊழியர்கள் போராட்டத்தின் போது, மாவட்ட கருவூல அலுவலகங்களில், தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்' என, உத்தரவிடப்பட்டுள்ளது. மின்னணு முறையில், அரசு ஊழியர்களின் மாத சம்பளபட்டியலை தயாரிக்க, 'விப்ரோ' நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதை ரத்து செய்து, அப்பணியை அரசே ஏற்று நடத்தக் கோரி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர், தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.ஜூன், 25, ஜூலை, 2ல், சென்னையில் கருவூலம் மற்றும் கணக்குத்துறை ஆணையம் அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதையடுத்து, கருவூலஅதிகாரிகளுக்கு, துறையின் கூடுதல் இயக்குனர் அனுப்பியுள்ள கடிதம்:அரசு ஊழியர்களின் தொடர் போராட்டங்களால், பாதிப்பு ஏற்படாமல் இருக்க, மாவட்ட கருவூல அலுவலகங்கள், சார் கருவூலங்களில், தகுந்த முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.கலெக்டர்கள், எஸ்.பி.,க் களை தொடர்பு கொண்டு, போராட்ட தருணங்களில், சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment