Tuesday, June 18, 2019

தெரிஞ்சுக்கோங்க வேலுமணி... பள்ளிக்கு விடுமுறை

Added : ஜூன் 17, 2019 23:45

சென்னை:குடிநீர் தட்டுப்பாடால், கிழக்கு தாம்பரத்தில் உள்ள, தனியார் மகளிர் பள்ளிக்கு, சமாளிப்பு நடவடிக்கையாக, இரண்டு நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்காமல், பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.மருத்துவமனை, ஓட்டல், தங்கும் விடுதிகளில் தண்ணீர் இன்றி பொதுமக்கள் தவிக்கின்றனர். கிழக்கு தாம்பரம் -- வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள, கிரைஸ்ட் கிங் தனியார் மகளிர் பள்ளியில், 6 முதல் பிளஸ் 2 வரை, 4,000 மாணவியர் பயின்று வருகின்றனர்.இப்பள்ளியில், குடிநீருக்காக அமைக்கப்பட்டிருந்த, ஆழ்துளை கிணறு, நீரின்றி வறண்டது. இதனால், அடிப்படை தேவைக்கு கூட நீர் இன்றி, பள்ளி நிர்வாகம் தவித்து வருகிறது.குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியாத நிலையில், பள்ளி நிர்வாகம், சமாளிப்பு நடவடிக்கையாக, 5 முதல், 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவியருக்கு, இரண்டு நாட்கள் விடுமுறை அளித்துள்ளது. சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு இல்லை என, அமைச்சர் வேலுமணி பேட்டி அளித்த நாளில், தண்ணீர் இன்றி, பள்ளிக்கு விடுமுறை விடப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.


No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024