Monday, July 15, 2019

இருளில் மூழ்கிய நியூயார்க் நகரம்

Added : ஜூலை 14, 2019 19:43 |



நியூயார்க் : அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஏற்பட்ட மின்தடை பல மணி நேரங்களுக்கு பிறகு சீரமைக்கப்பட்டது.

நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் பகுதியில் சனிக்கிழமை மாலை ஏற்பட்ட மின்தடையால் 73 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் மற்றும் தொழில்கள் பாதிக்கப்பட்டன. மின்தடையினால் புகழ்பெற்ற டைம்ஸ் ஸ்கொயர், சுரங்க பாதைகள் உள்ளிட்ட பகுதிகள் இருளில் மூழ்கின. பாதுகாப்பு காரணமாக சுரங்க பாதைகளை பயன்படுத்த வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மின் தடை ஏற்பட்டதால் பலர் இரவில் சாலைகளில் கூட்டம் கூட்டமாக நடந்து சென்றனர். மின்தடை ஏற்பட்ட போது நியூயார்க்கில் உள்ள புகழ்பெற்ற Carnegie ஹாலில் கச்சேரி நடத்திக்கொண்டு இருந்த குழுவினர் வெளியே வந்து பொது மக்கள் மத்தியில் கச்சேரியை தொடர்ந்தனர்.

மின்மாற்றியில் ஏற்பட்ட தீ விபத்து தான் மின் தடைக்கு காரணம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து நள்ளிரவு முதல் படிபடியாக மின்சார இணைப்பு சீரமைக்கப்பட்டது. மின் இணைப்பு சீரானதை சாலைகளில் இருந்த மக்கள் கூச்சலிட்டு கொண்டாடி வரவேற்றனர். கடந்த ஆயிரத்து 970ஆம் ஆண்டு நியூயார்க்கில் 25 மணி நேர மின் தடை ஏற்பட்டது. அந்த சம்பவம் நடைபெற்று சரியாக 42 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு மீண்டும் நீண்ட நேரம் மின்தடை ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

ICC nets 20 medical students for exam malpractice

LAST MONTH STORY ICC nets 20 medical students for exam malpractice The Hans India Update: 2026-04-29 07:58 IST Vijayawada: The high-tech sur...