Sunday, February 23, 2020

_ரூ.2000 செல்லாதா?: வதந்திகளை நம்ப வேண்டாம்

மாற்றம் செய்த நாள்: பிப் 22,2020

புதுடில்லி : ரூ.2000 நோட்டு செல்லாது என்பது குறித்து சமூக வலைதளங்களில் பரவும் செய்தியை நம்ப வேண்டாம் எனவும், பொதுமக்கள் வழக்கம் போல் பயன்படுத்தலாம் எனவும் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மார்ச் 1 முதல் இந்தியன் வங்கி ஏடிஎம்-ல் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் வைக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்படலாம் என்ற வதந்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனிடையே இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் தரப்பில், இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளின் பயன்பாட்டை படிப்படையாக அரசு குறைக்க உள்ளதாக தெரிவித்தது மேலும் அச்சத்தை அதிகரித்தது.

இந்நிலையில், இது குறித்து பேசியுள்ள ரிசர்வ் வங்கி அதிகாரிகள், இரண்டாயிரம் ரூபாய் நோட்டை தடை செய்வதற்கான எண்ணம் தற்போது வரை மத்திய அரசிடம் இல்லை. இதனால் அச்சமின்றி மக்கள் ரூ.2000 நோட்டுக்களை பயன்படுத்தலாம். ஏடிஎம்.மில் குறிப்பிட்ட வங்கியில் மட்டும் ரூ.2000 நோட்டுகள் வராது என்பதால், வங்கிக் கிளையில் தங்களிடம் உள்ள குறைந்த மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை அளித்து, ரூ.2000 நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.
தினமலர்_

No comments:

Post a Comment

NEET SS 2025 counselling deadlock ends as MCC prepares revised Round 2 schedule after SC verdict

NEET SS 2025 counselling deadlock ends as MCC prepares revised Round 2 schedule after SC verdict  TOI Education | Jul 29, 2026, 10.12 AM IST...