Tuesday, March 13, 2018

சோதனை அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற ஆடவருக்கு 3 வாரச் சிறைத்தண்டனை 

13/3/2018 21:41 Update: 13/3/2018 21:51


https://seithi.mediacorp.sg/mobilet/singapore/coffee-shop-operator-jailed-for-trying-to-bribe-inspection/3980144.html

சோதனை அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற 68 வயது சிங்கப்பூர் ஆடவருக்கு மூன்று வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

புக்கிட் பாத்தோக்கில் செயல்படும் Heng Heng உணவகத்தின் வர்த்தக உரிமையாளர் லாம் கிம் ஹெங் (Lam Kim Heng) அந்தக் குற்றத்தைக் கடந்தாண்டு அக்டோபர் மாதம் 14ஆம் தேதி புரிந்தார்.

உணவகத்திற்குச் சோதனைக்காக வந்த அதிகாரியிடம் சிகரெட் பாக்கெட் ஒன்றை அளித்து, அடுத்த முறை சோதனைக்கு வருவதற்கு முன் தன்னிடம் தெரிவிக்கும்படி கிம் ஹெங் கூறியுள்ளார்.

வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் விதிமுறைகள் ஏதும் மீறப்பட்டுள்ளனவா என்பதைச் சோதிக்க கழகம் நியமித்த CPG Facilities Managment நிறுவனத்தைச் சேர்ந்தவர் அந்த அதிகாரி என்று லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு தெரிவித்தது.

சிங்கப்பூரில், ஊழல் குற்றம் புரிந்ததாகத் தீர்ப்பளிக்கப்படும் ஒருவருக்கு 100,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது ஐந்து ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...