Sunday, August 5, 2018

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது உண்மைதான்: தனியார் விடுதிக் காப்பாளர் புனிதா ஒப்புதல்

Published : 05 Aug 2018 07:57 IST

கோவை

கோவை கணபதி மாநகரைச் சேர்ந்த ஜெகநாதன்(48), பீளமேடு பாலரங்கநாதபுரம் ஜீவா வீதியில் தர்ஷனா என்ற பெயரில் மகளிர் தங்கும் விடுதி நடத்தி வந்தார். இங்கு பீளமேடு பகுதியைத் சேர்ந்த புனிதா (32) வார்டனாகப் பணியாற்றினார்.

இந்த விடுதியில் 150-க்கும் மேற்பட்டோர் தங்கி இருந்தனர். கடந்த மாதம் ஜெகநாதனுக்குப் பிறந்த நாள் என்று கூறி, விடுதியில் இருந்த 5 மாணவிகளை, நட்சத்திர ஹோட்டலுக்கு வார்டன் புனிதா அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு மது அருந்துமாறும், வாட்ஸ்-அப் மூலம் ஜெகநாதனிடம் பேசுமாறும் அந்த மாணவிகளை புனிதா வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. வாட்ஸ்-அப் மூலம் ஜாலி

யாகப் பேசுமாறும், அவர் மகிழ்ச்சியடையும் வகையில் செயல்பட்டால், விடுதிக் கட்டணம் கூட கட்ட வேண்டாமெனவும் புனிதா தெரிவித்தாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, அந்த மாணவிகள், தங்களது பெற்றோருக்கு தகவல் அறித்தனர். இதுதொடர்பாக பீளமேடு போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையில், இந்த வழக்கில் தேடப்பட்ட ஜெகநாதன், நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில், கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். கோவை ஜுடீசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் எண். 6-ல் சரணடைந்த புனிதா, மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரை காவலில் எடுத்து விசாரித்த போலீஸார் கூறியது: மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது உண்மைதான் என புனிதா ஒப்புக் கொண்டுள்ளார். தான் சென்னையில் தலைமறைவாக இருந்ததாகவும், ஜெகநாதன் இறந்தை நாளிதழ்களில் பார்த்துதான் தெரிந்து கொண்டதாகவும் கூறினார் என்றனர். இதற்கிடையில், புனிதாவை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார், வரும் 14-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அவரை மத்திய சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment

Expanding Air India ’s punctuality woes leave passengers frustrated

Expanding Air India ’s punctuality woes leave passengers frustrated  Delay In Int’l Flights Testing Patience Of Loyal Customers  New Delhi :...