Monday, September 24, 2018

அசைவ ஓட்டல்கள் 30 சதவீதம் மூடல்

Added : செப் 24, 2018 02:24


சேலம்: ''புரட்டாசி எதிரொலியால், 30 சதவீத அசைவ ஓட்டல்கள், தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன,'' என, சேலம் மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்க செயலர், பழனிசாமி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: தமிழகத்தில், 1.65 லட்சம், சேலம் மாவட்டத்தில், 17 ஆயிரத்து, 500 ஓட்டல்கள் இயங்குகின்றன. இதில், 40 சதவீதம் சைவம், 30 சதவீதம் அசைவம், இரண்டும் கலந்தது, 30 சதவீதம் உள்ளன.புரட்டாசி மாதம் பிறந்த பின், அசைவ ஓட்டல்களில், விற்பனை சரிந்துள்ளது. இழப்பை தவிர்க்க, சேலம் உட்பட முக்கிய நகரங்களில், அசைவ ஓட்டல்களில், 30 சதவீதம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024