மாவட்ட செய்திகள்
மாம்பாக்கம் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து 3 மாணவர்கள் உள்பட 4 பேர் படுகாயம்
மாம்பாக்கம் அருகே பள்ளி வேன் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் படுகாயமடைந்தனர்.
பதிவு: நவம்பர் 01, 2018 03:00 AM
திருப்போரூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் கேளம்பாக்கத்தை அடுத்த மாம்பாக்கம் வேலம்மாள் தனியார் பள்ளியில் இருந்து 20 மாணவ– மாணவிகளை ஏற்றிக் கொண்டு தனியார் வேன் மேடவாக்கம் சாலை வழியாக தாம்பரம் அருகே மாடம்பாக்கம் சென்றது. மாம்பாக்கத்தை அடுத்த பொன்மார் பகுதியில் செல்லும் போது வேன் டிரைவர் முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றார். அப்போது அந்த வேன் சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாது.
இதில் தாம்பரம் மாடம்பாக்கம் சுதர்சன் நகரை சேர்ந்த யு.கே.ஜி. படிக்கும் பிரனவ்குமார்(4), வேதவர்ணம்(4), 2–ம் வகுப்பு படிக்கும் அஸ்வின் (6) மற்றும் சித்தாலபாக்கம் பகுதியை சேர்ந்த மாணவ–மாணவிகளை வேனில் இருந்து இறக்கிவிடும் வரலட்சுமி (வயது 57) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த மாணவர்கள் சென்னை பெரும்பாக்கம் குளோபல் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தாழம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:
Post a Comment