Tuesday, April 10, 2018

மே 2ல் சிறப்பு சுற்றுலா ரயில்

Added : ஏப் 09, 2018 23:39

மதுரை: இந்தியன் ரயில்வே உணவு, சுற்றுலா கழகம் சார்பில், மே., 2ல் ஏ.சி., சிறப்பு சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது. சுற்றுலா பயணியர் சென்னை, கோவை, கொச்சியில் இருந்து விமானம் மூலம் டில்லிக்கு அழைத்துச் செல்லப்படுவர். பின், சிறப்பு ரயில் மூலம் ஆக்ரா, அமிர்தசரஸ், ஸ்ரீநகர், குல்மார்க், சோன்மார்க் ஆகிய இடங்களுக்கு, 12 நாட்கள் சுற்றுலா அழைத்து செல்லப்படுவர், 'காஷ்மீர் ஸ்பெஷல்' என்ற பெயரிலான சுற்றுலாவுக்கு, ஒரு நபருக்கு, 42,800 ரூபாய். டில்லி, ஆக்ரா, அமிர்தசரஸ், குலு, மணாலி, மணிகரன், சண்டிகர் ஆகிய இடங்களை உள்ளடக்கிய, 12 நாட்கள் 'குலு மணாலி ஸ்பெஷல்' சுற்றுலாவுக்கு ஒரு நபருக்கு 43,500 ரூபாய்.ரயில்வே ஸ்டேஷனில் உள்ள சுற்றுலா கழகம் மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி இணையத்தளத்தில் முன்பதிவு விபரங்களை தெரிந்து கொள்ளலாம் .

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024