Saturday, April 14, 2018

சபரிமலையில் நாளை விஷூக்கனி

Added : ஏப் 13, 2018 23:46

சபரிமலை: சபரிமலையில் நாளை விஷூக்கனி தரிசனம் நடக்கிறது. குமரி மாவட்ட கோயில்களில் இன்று கனிதரிசனம் நடக்கிறது. சித்திரை ஒன்றாம் தேதி தமிழ் புத்தாண்டு குமரி மாவட்டத்தில் கேரள முறையை பின்பற்றி விஷூ தினமாக கொண்டாடப்படுகிறது. பூஜை அறையில் கண்ணாடி மற்றும் கிருஷ்ணன் படம் வைத்து காய் கனிகள், தங்க நகைகள் வைத்து வழிபடுவது விஷூ கொண்டாட்டமாகும்.சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயில் உள்ளிட்ட சில கோயில்களில் நாளை விஷூ கனிதரிசனம் நடக்கிறது. சபரிமலையில் நாளை விஷூ கனி தரிசனம் நடக்கிறது. அதிகாலை 4.00 மணிக்கு நடை திறந்ததும் கனி தரிசனம் நடக்கிறது. தொடர்ந்து தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு பக்தர்களுக்கு கைநீட்டம் வழங்குவார். பின்னர் வழக்கமான பூஜைகள் நடைபெறும். கடந்த 10-ம் தேதி மாலை திறந்த சபரிமலை நடை வரும் 18-ம் தேதி இரவு 10.00 மணி வரை திறந்திருக்கும்.

No comments:

Post a Comment

PG med counselling ’24, after delay, from Nov 8

PG med counselling ’24, after delay, from Nov 8  TIMES NEWS NETWORK 02.11.2024 Chennai : PG medical counselling for 2024, which faced signif...