Wednesday, April 18, 2018

 தமிழ்நாடு » விகடன்
கான்ஸ்டபிள் வேலையில் சேர போட்டிபோடும் டாக்டர்கள், இன்ஜினீயர்கள்!
 
விகடன் 
 
 

மும்பையில் கான்ஸ்டபிள் வேலையில் சேர ஆயுர்வேத டாக்டர்கள் மூன்று பேர் (BAMS), 423 இன்ஜினீயர்கள், 5 வழக்கறிஞர்கள், 167 எம்.பி.ஏ பட்டதாரிகள் உள்ளிட்ட 2 லட்சம் பேர் போட்டிபோட்டு வருகின்றனர்.

1,137 பணியிடங்களுக்கு 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதால் மும்பை போலீஸ் பல கட்டங்களாக தேர்வுகளை நடத்தி வருகிறது. விண்ணப்பித்தவர்களில் 524 எம்.காம் பட்டதாரிகள், 34 எம்.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ், 159 எம்.எஸ்.சி மற்றும் மாஸ் மீடியா படித்தவர்களும் அடக்கம். போலீஸ் கான்ஸ்டபிளுக்கான அடிப்படை தகுதி 12 ம் வகுப்பு மட்டுமே.

மகாராஷ்டிராவில் மட்டுமல்ல குஜராத்தில் 2017-ம் ஆண்டு கான்ஸ்டபிள் பணியில் அதிகளவில் பட்டதாரிகள் சேர்ந்துள்ளனர். இந்த மாநிலத்தில் கடந்த ஆண்டு கான்ஸ்டபிள்களான தேர்வு செய்யப்பட்டவர்களில் பி.இ, பி.டெக் படித்தவர்கள் 341 பேர். பி.சி.ஏ படித்தவர்கள் 458 பேரும் பி.எஸ்.சி, எம்.எஸ்.சி படித்தவர்கள் 49 பேரும் காஸ்டபிள் பணியில் சேர்ந்துள்ளனர். கான்ஸ்டபிள் வேலையில் உள்ள இருவர் எம்.டெக் பட்டதாரிகள்.

தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு மிகவும் குறைந்துவிட்டதாலும், பட்டதாரிகளுக்கு ஆங்கிலப் புலமை இல்லாத காரணத்தாலும் தகுதியான வேலைகளில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 23.12.2025